அமித்ஷாவிடம் பேசியது என்ன? டிடிவி தினகரன் பேட்டி!

Published On:

| By Kavi

திமுகவை வீழ்த்துவதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ”தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. பாஜக ஒரு தேசிய கட்சி. 

ADVERTISEMENT

ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பியூஸ் கோயல் சென்னையில் வந்து உட்கார்ந்து பேச முடியாது.

அதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அமித்ஷாவை பார்த்தார். பாஜகவுக்கான தொகுதிகளை பற்றி பேசி இருப்பார்கள். பேசி இருக்கலாம் எனக்கு தெரியவில்லை.

ADVERTISEMENT

நாங்கள் அமித்ஷாவிடம் என்ன பேசினோம் என்றால், 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் எல்லாம் எப்படி எதிர்கொள்வது என பேசினோம்.

பீகாரில் எப்படி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்களோ, அதுபோல தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்படுவது தொடர்பாக பேசுவதற்காக தான் என்னை அழைத்திருந்தார்கள்.

நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். 

நாங்கள் எல்லாம் டெல்லிக்கு வந்தாலே முதல்வர் பயப்படுவது போல் தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு சரியான நிதியை பெற்றுத்தர மாட்டார்களா என்று பேசுகிறார். டெல்லியிடம் சரியான புரிதல் இல்லாமல் குழாயடி சண்டை போடுகிறார்கள்.

தேர்தல் அறிவித்த பிறகு நாங்கள் எப்படி நிதியை பெற்றுத் தர முடியும். இது தேர்தல் காலம்.  
இந்த நேரத்தில் திமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். 

இந்த 12 ஆண்டுகளில் 12 லட்சம் கோடிக்கு மேல் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை 3 லட்சம் கோடி தான் பணமே வந்துள்ளது. இவர்களுக்கு நிதி ஆளுமை இல்லை” என்று விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share