தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் – டிடிடிசி (TTDC) பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 4 காலியிடங்கள் (Vacancies) நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 23, 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம் (TTDC Vacancies details)
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கீழ்க்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:
- ஜூனியர் ஆர்க்கிடெக்ட் – 1 இடம்
- சைட் இன்ஜினியர் (சிவில்) – 2 இடங்கள்
- ஏஜிஎம் (மார்க்கெட்டிங்) – 1 இடம்
மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
பணியிடத்தைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும்.
ஜூனியர் ஆர்க்கிடெக்ட்
- ஆர்கிடெக்சர் துறையில் பட்டப்படிப்பு
- குறைந்தது 2 ஆண்டு அனுபவம்
சைட் இன்ஜினியர் (சிவில்)
- சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
- 5 ஆண்டு அனுபவம்
ஏஜிஎம் (மார்க்கெட்டிங்)
- மார்க்கெட்டிங் / டூரிசம் / பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் எம்பிஏ
- 5 ஆண்டு அனுபவம்
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- தகுதி அடிப்படையில் ஷார்ட் லிஸ்டிங்
- அதன் பிறகு நேர்முகத் தேர்வு
இண்டர்வியூவில் தேர்ச்சி பெறும் நபர்கள் இறுதியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
- தேவையான விவரங்களை பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
- மார்ச் 23, 2026
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வெளியான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை துறையில் படித்தவர்களுக்கு நல்ல அரசு வேலை வாய்ப்பாக கருதப்படுகிறது என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
