அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் முயற்சிக்கு எதிராக 150 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்த பிறகு, பிரிக்ஸ் கூட்டணி பிரிந்து விட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Trump Brics broke up
டிரம்ப் இதுகுறித்து பேசுகையில், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை மாற்ற முயன்றன. அவர்கள் புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். எனவே, நான் பதவியேற்றதும், முதலில், டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை பயன்படுத்த நினைக்கும் எந்த ஒரு பிரிக்ஸ் நாட்டுக்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தேன். உங்கள் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்றும் கூறி, அதற்கு பிறகு அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. இதனால், பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரிந்துவிட்டது,” என்று கூறினார்.
பிரிக்ஸ் நாடுகள் மற்றும் டாலர் சவால்
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். இக்கூட்டணியின் பொருளாதார சக்தி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த 15ஆவது பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “பிரிக்ஸ் நாடுகள், தேசிய நாணயங்களில் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்தி, வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
ட்ரம்பின் கடும் நிலைப்பாடு
முன்னதாக, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று, “பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றால், 100% வரி விதிக்கப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். பின்னர், ஜனவரியில் இதேபோன்ற எச்சரிக்கையை மறுபடியும் கூறிய அவர், “பிரிக்ஸ் மரித்துவிட்டது” என்றும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டார்.
ட்ரம்ப் தனது அதிபர் பதவியில் இருந்தபோது, அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், வல்லரசு நிலையை உறுதிப்படுத்தவும், அமெரிக்க டாலரின் வலிமையை மேம்படுத்தவும், கடுமையான பொருளாதார கொள்கைகளை பின்பற்றினார்.
உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள், சர்வதேச பொருளாதார நிலைமையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Trump Brics broke up
