அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூலை 1 அன்று இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காவிட்டால், நிலைமைகள் மேலும் மோசமடையும் எனவும் அவர் எச்சரித்தார். Trump says Israel has agreed Gaza ceasefire

இந்த அறிவிப்பை அவர், வாஷிங்டனில் நடைபெற உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் சந்திக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் வெளியிட்டார்.
டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “ஹமாஸ் இன்னும் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது,
“எனது பிரதிநிதிகள் இஸ்ரேலியர்களுடன் காசா குறித்து ஒரு நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். இஸ்ரேல், 60 நாள் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த காலத்தில், யுத்தத்தை முடிக்க அனைத்து தரப்புகளுடனும் நாங்கள் பணியாற்றுவோம். இந்த இறுதி யோசனையை கத்தார் மற்றும் எகிப்து அதிகாரிகள் வழங்குவார்கள். அவர்கள் அமைதியை ஏற்படுத்த பல முயற்சி செய்துள்ளனர். மேலும், மத்திய கிழக்கு நலனிற்காக இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். Trump says Israel has agreed Gaza ceasefire