ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்

Published On:

| By Mathi

Strait of Hormuz New

உலக நாடுகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதால் ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்க வேண்டும் என ஈரான் அரசுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். இந்தக் கெடுவை ஈரான் மீறினால், அதன் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஹோர்முஸ் நீரிணை, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. நமது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% மற்றும் எல்பிஜி இறக்குமதியில் சுமார் 90% இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி ஒரு சலுகையை அளித்துள்ளது.

ADVERTISEMENT

ஈரானின் பிடியில் சிக்கியிருந்த ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ உள்ளிட்ட இந்தியக் கொடி ஏந்திய சமையல் எரிவாயு கப்பல்கள், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன.

போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையில் கடுமையான உயர்வை ஏற்படுத்தக்கூடும்.

ADVERTISEMENT

இதே போல உலகின் பல நாடுகளும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாக திறக்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால் டிரம்ப் கெடு விதித்துள்ளது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share