தமிழ் திரை உலகில் 40 வயதை கடந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா.
சென்னையில் மே 4, 1983ல் பிறந்த த்ரிஷா மாடலிங் துறையில் இருந்து வந்தார். மிஸ் சேலம், மிஸ் சென்னை உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் நாயகியான அறிமுகமான த்ரிஷாவின் திரை உலக பயணம் சாமி, கில்லி, தொடங்கி பொன்னியின் செல்வன், விடாமுயற்சி என தற்போது வரை நடிகையாகவே வலம் வருகிறார்.
திரை உலகில் பல வெற்றிப்படங்களில் நடித்த த்ரிஷாவின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பஞ்சாப்பை சேர்ந்த ஒரு தொழிலதிபரை த்ரிஷா திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா இன்று (அக்டோபர் 10) தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “பிறர் எனக்காக எனது வாழ்க்கையை திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்படியே எனது தேனிலவையும் அவர்கள் திட்டமிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.