ADVERTISEMENT

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மீது திரிஷா விமர்சனம்? சோசியல் மீடியாவில் பட்டிமன்றம்!

Published On:

| By Mathi

Vijay Son Jason Sanjay Trisha

தவெக தலைவர் விஜய் மகனை மறைமுகமாக குறிப்பிட்டு நடிகை திரிஷா விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.

நடிகர் பார்த்திபனிடம் நிகழ்ச்சி ஒன்றில், திரிஷாவின் போட்டோவை காட்டி கமெண்ட் கேட்கப்பட்டது. பார்த்திபனும், பொன்னியின் செல்வனில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தை முன்வைத்து, ’குந்தவையை வீட்டுக்குள் குந்தவையுங்க’ என கூறியிருந்தார். விஜய்யும் திரிஷாவும் ஒரே நிற உடையில் ஒரே காரில் ஜோடியாக வந்ததை பார்த்திபன் விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இதனைக் கண்டித்து திரிஷா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பிறகு பார்த்திபனும் வருத்தம் தெரிவித்துவிட்டார்.

பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்து திரிஷா பதிவிட்டதில், “ஒரு நபர் தமது உதவியாளர் மூலமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு எனது பெயரையும் படத்தையும் கடைசி நிமிடத்தில் சேர்த்து என்னைப்பற்றி பேச வைத்துவிட்டதாகவும்” கூறியிருந்தார்.

ADVERTISEMENT

தற்போது, திரிஷா குறிப்பிடும் அந்த நபர் யார்? என்பது குறித்து சோசியல் மீடியாவில்; பெரும் பட்டிமன்றமே நடந்துவருகிறது. இதில் பலரும், விஜய்யின் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யைதான் திரிஷா மறைமுகமாக விமர்சித்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share