டிஜிட்டல் திண்ணை: திருச்சி கிழக்கு.. வீட்டுக்கு வீடு தங்க மூக்குத்தி.. விஜய்யின் அதிரடி ப்ளான்!

Published On:

| By Mathi

வைஃபை ஆன் செய்ததும், “ஆடுங்கடா என்ன சுத்தி… நான் அய்யனாரு வெட்டுக் கத்தி” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. ஒரே குதூகலமா? விஜய் மேட்டரை சொல்ல போற மாதிரி பாட்டெல்லாம் பலமா இருக்கே?

ADVERTISEMENT

ஆமாய்யா.. விஜய் சேதிக தான்.. பெரம்பூர்ல வேட்பு மனுத் தாக்கல் செஞ்சுட்டு பிரசாரத்தை தொடங்கிட்டாரு விஜய்..

அடுத்ததா நாளைக்கு மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியிலேயும் வேட்பு மனுத் தாக்கல் செஞ்சுட்டு பிரசாரத்தை ஆரம்பிக்க போறாரு..

ADVERTISEMENT

பெரம்பூர் தொகுதியில விஜய் தவெக உறுப்பினர்களே 40,000-க்கும் மேல இருக்கிறதா சொல்லி இருந்தோம்.. திருச்சி கிழக்கு நிலவரம் எப்படிய்யா?

திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரைக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக இனிகோ இருதயராஜ்.

ADVERTISEMENT

2008 தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உருவானதுதான் திருச்சி கிழக்கு தொகுதி.. இங்க, 2011, 2016-ல் அதிமுகவும் 2021-ல் திமுக இனிகோ இருதயராஜும் ஜெயிச்சாங்க.. இந்த டைமும் இனிகோ இருதயராஜ் களமிறங்கி இருக்காரு..

அதிமுகவோட ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியில கிருஷ்ணசாமியும் இந்த முறை வேட்பாளர்களாக நிற்கிறாங்க..

திருச்சி கிழக்கு தொகுதிக்குள்ள நாம ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்தோம்.. “திருச்சி கிழக்கு தொகுதியில மொத்தமா சுமார் 2 லட்சம் பேர் ஓட்டர்ஸ்.. இன்னும் சரியா சொல்லனும்னா 2 லட்சத்து 17 ஆயிரத்து 397 பேர் வோட்டர்ஸ் .. |

இதுல மெஜாரிட்டியா இருக்கிறது இந்து வெள்ளாளர் சமூகம்தான்.. சுமார் 41 ஆயிரம் பேர் இருக்காங்க.. அவங்களுக்கு அடுத்ததா சொல்லனும்னா முஸ்லிம்கள்.. 37 ஆயிரம் பேர் இருக்கிறாங்க.. 3-வது தலித்துகள் 26 ஆயிரத்துக்கு மேல இருக்காங்க.. 4-வது கிறிஸ்தவர்கள் 21 ஆயிரம் பேர்.. முக்குலத்தோர் 13 ஆயிரம் பேர் வாக்காளர்களாக இருக்காங்க..

இவங்க இல்லாம யாதவர், தேவேந்திர குல வேளாளர்கள், முத்தரையர், முதலியார், செட்டியார், ஜெயின்- செளராஷ்டிரா, நாயக்கர், கோனார் சமூக மக்களும் கணிசமா இருக்காங்க”..

என்னய்யா… கிறிஸ்தவர்கள் அதிகமா இருக்குற தொகுதின்னு சொல்லிதானே விஜய் போட்டி போடுறாருன்னு சொன்னாங்க?

அப்படித்தான் சொன்னாங்க..ஆனா லோக்கல் கட்சிகாரங்ககிட்ட பேசுனப்ப, “2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னாடிதான் அப்படி கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியா இருந்தாங்க இந்த தொகுதியில.. இப்ப கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிற தொகுதியா மாறிடுச்சு.. சோழிய வெள்ளாளர், முஸ்லிம்கள், தலித்துகள்தான் அதிகமா இருக்காங்க.. அவங்களுக்கு அடுத்துதான் கிறிஸ்தவர்கள்.. இங்க டிசைடிங் பேக்டர்னு பார்த்தா இந்து ஓட்டுகள்தான்”ன்னு சொல்றாங்க…

அதோட, “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டுகளை திமுக இனிகோ இருதயராஜூம் விஜய்யும் வாங்குவாங்க.. அதனால தலித்துகள் உட்பட இந்துக்கள் ஓட்டுகள்தான் இங்கே தீர்மானிக்கிற சக்தியா இருக்கும்”னு சொல்றாங்க..

சரிய்யா இவ்வளவு விவரமா சொல்றீரே.. யூத் வோட்ஸ் எப்படி இருக்கு?

அதை பத்தியும் விசாரிச்சோம்யா, முதல் தலைமுறை வோட்டர்ஸ், யூத்ஸ்னு சொல்ற 18 வயசில இருந்து 29 வரைக்கும் இருக்கிறவங்கன்னு பார்த்தா, மொத்தம் இருக்கிற 2 லட்சத்துல 43 ஆயிரம் பேர் இருக்காங்க.. ஆண்களும் பெண்களும் சமமாத்தான் இருக்காங்க..

ஆனா இந்த ஏஜ் குரூப்பை விட மெச்சூரிட்டி ஏஜ் 40-ல் இருந்து 49 வரைக்கும் இருக்கிறவங்க குரூப்தான் ரொம்ப அதிகம்.. ஆண்கள்.. பெண்கள்னு மொத்தமா கணக்கு பார்த்தா 48 ஆயிரம் பேர் இருக்கிறாங்க.. அதனால 90’ஸ் கிட்ஸ்- 80’ஸ் கிட்ஸ்கதான் இங்கே டிசைடிங்க் பேக்டரா இருக்கிறாங்க”ய்யா

நீங்க ரவுண்ட்ஸ் போனதுல வேற என்ன சொல்றாங்க?

தொகுதிகளில்ல விசாரிக்கிறப்ப, “சிட்டிங் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் லோக்கல் என்பதால் அப்ரோச் பண்ண ஈஸியா இருக்கு.. ஆனா விஜய் ஜெயிச்சா யாருகிட்ட போய் என்னான்னு சொல்லி என்னத்தை கேட்கிறது?”ன்னு சலிச்சுக்கிறாங்கய்யா

உங்க கணக்குல தொகுதி நிலவரம் எப்படி இருக்குதாம்?

இப்ப இருக்கிற நிலவரத்தை பார்த்தோம்னா, மைனாரிட்டி ஓட்டு பிரியுது… டிசைடிங் பேக்டரா இந்துக்கள் இருக்க போறாங்க.. லோக்கல் எம்.எல்.ஏங்கிற அப்படிங்கிற கேட்டகிரி விஜய்க்கு ரொம்பவே நெகட்டிவ்வா இருக்கு.. அதோட அதிமுக மெஜாரிட்டியா இருக்கிற சோழிய வெள்ளாளர் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறதையும் நாம கவனிக்கனும்யா..

எல்லா தொகுதியில மாதிரியிலும் இங்கேயும் ‘கவனிப்புகள்’ எப்படி இருக்கு?

நம்மகிட்ட பேசுன தவெக நிர்வாகிகள் சிலர், “எங்க தொகுதியில விஜய்க்கு எந்த டேமேஜூம் வந்துடக் கூடாது.. ஒன்னு ரெண்டு நெகட்டிவ் இருந்தாலும் அதை பேலன்ஸ் பண்றதுக்காக இந்த தொகுதியில 50 ஆயிரம் பெண்களுக்கு ரூ.3,500 மதிப்பில மூக்குத்தி தர்றதுக்கு ஆர்டர் கொடுத்திருக்கோம்.. அவங்க எல்லாம் காசா கொடுத்தா நாங்க மாஸா கொடுப்போம்”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share