ADVERTISEMENT

‘உயிரிழந்தவர்களுக்கு பறந்த டிரான்ஸ்பர் ஆர்டர்’ – அண்ணாமலை பல்கலை அஜாக்கிரதை

Published On:

| By Pandeeswari Gurusamy

chidambaram university

அண்ணாமலை பல்கலையில் பணியாற்றி உயிரிழந்தவர்களுக்கு அஜாக்கிரதையாக டிரான்ஸ்பர் ஆர்டர் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கழைக்கழக நிர்வாகம் கடந்த 2012ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததை தொடர்ந்து 2013ம் ஆண்டு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து நடைபெறும் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் மிகை பணியாளர்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பல்வேறு அரசு கல்லுாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுவரையில், 7 ஆயிரம் பேர் பணி நிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 374 உதவியாளர்கள் சென்னை தலைமை செயலகத்திற்கு உதவி அலுவலர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் தியாகராஜன் என்பவருக்கும் பணியிட மாற்றம் செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தியாகராஜன் உயிரிழந்து 5 மாதங்கள் ஆகும் நிலையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் மின் துறை உதவியாளராக இருந்த அருள் முருகன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கும் ஊட்டி தொழில் நுட்ப கல்லூரிக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலை கழக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share