கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கரூர் வெள்ளியணை பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்கும்போது விஎஸ்பி கல்லூரி பேருந்து தண்டவாளத்தில் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் கல்லூரி பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது? இருப்பு பாதையை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதா? அப்படியெனில் ரயில்வே கேட் மூடப்படவில்லையா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடலூா் அருகே செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
