பயணிகள் கனிவான கவனத்துக்கு: ரயில் கட்டணங்கள் ஜூலை 1 முதல் உயர்வு- கூடுதல் கட்டணம் எவ்வளவு?

Published On:

| By Minnambalam Desk

Train Fare Hike

நாடு முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Train Fare Hike
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் பல கோடி பேர் பயன்படுத்தக் கூடியது ரயில் சேவைகளைத்தான். ரயில் கட்டணங்கள் கணிசமாக குறைவாக இருப்பதால் நடுத்தர மக்களின் தேர்வு, ரயில் பயணமாகவும் இருக்கிறது.

2020-ம் ஆண்டு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன் பின்னர் தற்போது ஜூலை1-ந் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய கட்டணங்களின்படி,

500 கிமீ-க்குள் Non AC-ல் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக ரூ5, AC-ல் பயணிப்போர் கூடுதலாக ரூ10 செலுத்த வேண்டும்; 1000 கிமீ தொலைவு Non-Ac-ல் பயணித்தால் கூடுதலாக ரூ20 கட்டணம் செலுத்த வேண்டும்.

500 கிமீ தொலைவு வரையிலான 2-ம் வகுப்பு கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காதாம்.

500 கிமீ-க்கு அப்பால் 2-ம் வகுப்பு கட்டணங்களில் 1 கி.மீ-க்கு அரை பைசா கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்கின்றன ரயில்வே வட்டார தகவல்கள்.

இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ10,000 கோடி முதல் ரூ12,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share