கொடைக்கானலில் டிராஃபிக் – தயாராகும் டிபிஆர் : அமைச்சர் எ.வ வேலு பதில்!

Published On:

| By Kavi

Traffic in Kodaikanal DPR being prepared

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 2) தெரிவித்தார். Traffic in Kodaikanal DPR being prepared

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 4) கேள்வி நேரத்தின் போது, பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில் குமார்,  “கொடைக்கானலில் 3, 4 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்கனவே அமைச்சர் வேலு அங்கு ஆய்வு செய்திருக்கிறார்.  அந்த பணி எந்த நிலையில் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “இந்தியா முழுவதுமிலிருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கொடைக்கானல் பகுதியில் மாற்றுப்பாதை பணிகள் ஆய்வு செய்துள்ளேன். திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும்  முதல்வரிடம் பேசி தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என்று கூறினார். Traffic in Kodaikanal DPR being prepared

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share