உலக அளவில் இதுவரை அதிக அளவில் வசூல் செய்த தெலுங்குப் படங்கள் வரிசையில் …
1745 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது பாஹுபலி பாகம் இரண்டு.
1642 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருப்பதும் ஓர் இரண்டாம் பாகம்தான், புஷ்பா பாகம் இரண்டு.
1268 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது RRR.
1016 கோடி வசூலுடன் நான்காவது இடத்தில் கல்கி 2898 AD.
617 கோடி பெற்று ஐந்தாம் இடத்தில் இருப்பது சலார்.
565 கோடி வசூலுடன் ஆறாம் இடத்தில் இருப்பது, முதலிடத்தில் இருக்கும் படத்தின் முதல் பாகம். அதாவது பாகுபலி பாகம் ஒன்று.
425 கோடியுடன் ஏழாம் இடத்தில் இருப்பது சாஹோ.
407 கோடி வசூல் செய்து எட்டாம் இடத்தில் இருப்பது தேவரா.
368 கோடியுடன் ஒன்பதாம் இடத்தில் இருப்பது புஷ்பா முதல் பாகம்.
357 கோடி வசூல் செய்து பத்தாம் இடத்தில் இருப்பது ஆதிபுருஷ்.
இது மட்டுமல்ல .. டாப் 25 உலக மகா வசூல் தெலுங்குப் படங்களில் பவன் கல்யாணுக்கும் ஜூனியர் என் டி ஆருக்கும் தலா இரண்டு படங்கள்.
சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் மூவருக்கும் தலைக்கு மூன்று படங்கள் .
மகேஷ் பாபுவுக்கு ஐந்து.
பிரபாசுக்கு ஆறு… அதுவும் முதல் ஐந்து படங்களில் மூன்று பிரபாஸ் நடித்த படங்கள்தான்.
அடுத்தபடியாக பிரபாசுக்கு தி ராஜா சாப் (ஜனவரி 9, 2026), சலார்: பாகம் 2 – ஷௌர்யாங்க பர்வா, போலீஸ் டிராமா ஸ்பிரிட், கல்கி 2898 AD: பாகம் 2, மற்றும் வரலாற்று டிராமா திரைப்படம் ஒன்று என்று கியூ ரொம்ப நீளம்.
ஐப்பசி மாத அடைமழை என்றால் இதான்.
–ராஜ திருமகன்
