கடலூரில் ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக செல்லும் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை மஞ்சகுப்பத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 30,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
கெட் அவுட் ஸ்டாலின்
திமுகவினர் get out modi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், இன்று காலை GET OUT STALIN என தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தொடக்க விழா!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. அப்போது தொண்டர்கள் மத்தியில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உரையாற்ற உள்ளார்.
வெயில் அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்று முதல் 23ஆம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுபிஎஸ்சி கால அவகாசம் நிறைவு!
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இன்றைய ரிலீஸ்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ ஆகிய 3 திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.
மதுரை எய்ம்ஸ்!
2027ஆம் ஆண்டுக்குள் முழு கட்டுமானத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சோனியா காந்தி! காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவு காரணமாக சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் இன்று வீடு திரும்புவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.