ADVERTISEMENT

கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம்- அதிமுக அதிருப்தி தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு- Live

Published On:

| By Mathi

KAS Pressmeet Gobi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுகவில் ஏற்கனவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தார்; சட்டமன்றத்திலும் தனித்து செயல்பட்டு வந்தார். பின்னர் சமாதானம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் எடப்பாடி பழனிசாமி தம்மை தொடர்ந்து புறக்கணித்து உதாசீனப்படுத்துவதாக செங்கோட்டையன் வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் தாம் செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசப் போவதாக திடீரென செங்கோட்டையன் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

ADVERTISEMENT

செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு:

Ex Minister K.A.Sengottaiyan MLA | SEP 5 2025 | GOBICHETTIPALAYAM
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share