ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு – டிஆர்பி அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம்  பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்ட தேர்வு வாரியம் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டது. 

இந்நிலையில் மீண்டும் இன்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதில்,  “ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் – II) நடத்துவதற்கான அறிவிக்கை http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வர வேண்டும்.  இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

முக்கியத் தேதிகள்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 13-02-2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18-02-2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10-04-2026
விண்ணப்பத் திருத்தம்: 11-04-2026 முதல் 13-04-2026 வரை

தேர்வு நடைபெறும் தேதிகள்

TNTET தாள் – I : 04-07-2026 (முற்பகல்)
TNTET தாள் – II : 05-07-2026 (முற்பகல்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share