தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. TNPSC Group IV
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4-ல் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்,வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. தற்போது 3,935 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம் 13.89 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் ஜூலை 12-ந் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. apply.tnpscexams.in இணைய தளம் மூலமாக ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.