தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேர்வில் 47.44% தேர்வர்கள் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் உதவி பொறியாளர் தொடங்கி உதவி கண்காணிப்பாளர் வரை மொத்தம் 1033 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இப்பணியிடங்களுக்கு 92,495 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பதாரர்களுக்கான பாடத் தேர்வு, ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கணிணி வாயிலாக நேற்று ஆகஸ்ட் 17-ந் தேதியன்று, தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வுகளை 48,627 பேர் மட்டுமே எழுதினர். சுமார் 47.44% தேர்வர்கள் நேற்று தேர்வு எழுத வரவில்லை என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.