சென்னையில் இன்று ஜனவரி 20-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தாம் பங்கேற்க இயலாது என மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கூறியதாக அக்கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே,, நிவேதித் ஆல்வா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 91 பேரில் 60 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும் 30 பேர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி மேலிடம் கடிவாளம் போட்டுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காத மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், “ இன்றைய தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க இல்லாது என்பதை அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் சொல்லி விடுப்பு எடுத்து இருக்கிறேன்.
உண்மையான காங்கிரஸகாரன் என பதிவிட்டுள்ளார்.
