“ஐயோ… அரையாண்டு லீவு முடியபோகுதே! ஸ்கூல் போகணுமே… ஹோம் ஒர்க் வேற எழுதலையே!” என்று சோகத்தில் இருக்கும் மாணவர்களா நீங்கள்? கவலையைத் தூக்கிப் போடுங்க!
“ஸ்கூல் திறந்தாலும், இந்த மாசம் முழுக்க உங்களுக்குக் கொண்டாட்டம் தான்” என்று சொல்லும் அளவுக்கு, ஜனவரி 2026ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு ‘விடுமுறை மாதமாகவே’ அமைந்துள்ளது. காலண்டரைப் பார்த்தால், பாதி நாட்கள் சிவப்பு மையால் தான் குறிக்கப்பட்டிருக்கிறது!
பள்ளி திறப்பு எப்போது?
தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள், அதாவது ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
“என்னடா இது, வெள்ளிக்கிழமை போய் ஸ்கூல் திறக்குறாங்களே” என்று நீங்கள் அலுத்துக்கொள்வது கேட்கிறது. ஆனால், ஒரு நாள் பள்ளிக்குச் சென்றால் போதும், அடுத்து சனிக்கிழமை, ஞாயிறு என மீண்டும் லீவு வந்துவிடும்!
லீவு மழை… எதனால் 14 நாட்கள்?
ஜனவரி மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 14 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. அது எப்படி என்று பார்க்கலாமா?
- வார விடுமுறைகள்: ஜனவரி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைக் கணக்கிட்டாலே கணிசமான விடுமுறை நாட்கள் வந்துவிடும்.
- பொங்கல் பண்டிகை: தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகையான பொங்கல் திருவிழா ஜனவரி மத்தியில் வருகிறது. போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் அரசு விடுமுறை நிச்சயம்.
- குடியரசு தினம்: ஜனவரி 26 (திங்கட்கிழமை) குடியரசு தின விடுமுறை வருகிறது.
- தைப்பூசம்: இதுதவிர, தைப்பூசத் திருநாளும் ஜனவரி மாத இறுதியில் வர வாய்ப்புள்ளது.
இதையெல்லாம் சேர்த்தால், பாதி மாதம் வீட்டில் ஜாலியாக இருக்கலாம்!
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வார்னிங்’:
6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது மிக முக்கியமான நேரம். ஜனவரி மாதத்தில் பள்ளிகள் செயல்படும் நாட்கள் குறைவாக இருப்பதால், பாடங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்கள் ‘வேகமெடுப்பார்கள்’.
ஜனவரி மாசம்னாலே குளிரும், கொண்டாட்டமும்தான். ஆனா, பொதுத்தேர்வு எழுதப்போற பசங்க கொஞ்சம் உஷாரா இருங்க. லீவு அதிகமா இருக்கேனு புத்தகத்தைத் தூக்கிப் போடாம, கிடைக்குற கேப்ல ரிவிஷன் (Revision) பண்ணுங்க.
குறிப்பா, பொங்கல் லீவுல ஒரு டைம் டேபிள் போட்டுப் படிச்சா, மார்ச் மாசம் எக்ஸாம் ஹால்ல பதட்டம் இல்லாம இருக்கலாம். பெற்றோர்களே… ஜனவரி 2ஆம் தேதி ஸ்கூல் திறந்தாலும், புத்தகம், நோட்டு, யூனிஃபார்ம் எல்லாம் சரியா இருக்கானு இப்பவே எடுத்து வச்சிருங்க. பசங்க லீவு மூடிலேயே இருப்பாங்க, அவங்கள ஸ்கூல் மூடுக்கு மாத்துறது உங்க பொறுப்பு!
