தமிழ்நாடு உப்பு கழகத்தில் அரசு வேலை வாய்ப்பு… இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

TN salt corporation recruitment 2026

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு கழகம் (TN Salt) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 31, 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) நிரப்பப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

TN Salt காலியிடங்கள் விவரம் (Vacancies details)

தமிழ்நாடு உப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கீழ்க்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

  • டெப்யூட்டி மேனேஜர் (ஆபரேஷன் அண்ட் மேன்டினன்ஸ்) – 1
  • டெப்யூட்டி மேனேஜர் (டெக்னிக்கல்) – 1
  • டெப்யூட்டி மேனேஜர் (ப்ரொடக்ஷன்) – 1
  • அசிஸ்டென்ட் இன்ஜினியர் (சிவில்) – 1
  • சூப்பர்வைசர் – 2

மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

கல்வித் தகுதி

பணியிடத்தைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும்.

டெப்யூட்டி மேனேஜர் (ஆப்பரேஷன் & மேன்டினன்ஸ்)

ADVERTISEMENT
  • பி.இ / பி.டெக் (எலெக்ட்ரிக்கல்)
  • 6–7 ஆண்டு அனுபவம்

டெப்யூட்டி மேனேஜர் (டெக்னிக்கல்)

  • பி.இ / பி.டெக் (மெக்கானிக்கல்)
  • 6–7 ஆண்டு அனுபவம்

டெப்யூட்டி மேனேஜர் (ப்ரொடக்ஷன்)

  • பி.இ / பி.டெக் (கெமிக்கல் இன்ஜினியரிங்)
  • 6–7 ஆண்டு அனுபவம்

அசிஸ்டென்ட் இன்ஜினியர் (சிவில்)

  • பி.இ / பி.டெக் (சிவில்)
  • அனுபவம் அவசியம்

சூப்பர்வைசர்

  • ஐ.டி.ஐ ஃபிட்டர் மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு
  • குறைந்தது 5 ஆண்டு அனுபவம்

சம்பளம் மற்றும் வயது வரம்பு

  • டெப்யூட்டி மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் இன்ஜினியர் : மாதம் ரூ.50,000
  • சூப்பர்வைசர் : மாதம் ரூ.35,000

வயது வரம்பு:

  • டெப்யூட்டி மேனேஜர் / இன்ஜினியர் – 40 வயதிற்குள்
  • சூப்பர்வைசர் – 35 வயதிற்குள்
தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  • அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்

மின்னஞ்சல்: recruitment@tnsalt.com

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • மார்ச் 31, 2026

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு உப்பு கழகத்தில் வெளியான இந்த வேலைவாய்ப்பு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share