ADVERTISEMENT

தமிழ்நாடு முதலிடம் : திமுக ஆட்சியைப் பழிப்போருக்கு நெத்தியடி பதில் இதுதான் – ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By christopher

TN No 1 in industrial employment under dmk govt

தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. ஆட்சியைப் பழிப்போருக்கு இதுதான் நெத்தியடி பதில் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% உடன் தமிழ்நாடு தொழில்துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் (13.07%), மகாராஷ்டிரா (12.95%), உத்தரபிரதேசம் (8.30%), கர்நாடகா (6.29%) ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு – வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்கள் குழு.

இன்று வெளியிடப்பட்ட இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% உடன் தமிழ்நாடு தொழில்துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது! இது நாட்டின் ஆறு தொழிற்சாலை தொழிலாளர்களில் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 5-6% மட்டுமே!

ADVERTISEMENT

தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை 40,100 க்கும் மேற்பட்டவைகளுடன் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதாவது தேசிய பங்கில் 15.43%.

இது எங்கள் தரவுகள் அல்ல… மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ தரவுகள், எதிர்க்கட்சிகள் பரப்பும் அரசியல் நோக்கம் கொண்ட பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த பதில்.

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. மேலும் உற்பத்தி தொடர்ந்து அந்தக் கதையின் மையமாக உள்ளது, மேலும் தொழில்துறை துறையின் முதலீட்டு ஊக்குவிப்பு #JobsForTN இல் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது, இது இணைக்கப்பட்ட அட்டவணையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது! மற்ற மாநிலங்கள் முதலீட்டு எண்ணிக்கையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த திராவிட மாதிரி #GoTN வேலைகளில் கவனம் செலுத்துகிறது🌟

தமிழ்நாடு தொடர்ந்து #திறமைத் தலைநகராகவும், இந்தியாவின் #உற்பத்தித் தலைநகராகவும் உள்ளது!

இந்தியாவில் பாயும் முதலீடுகளுடன், தமிழ்நாட்டில் உற்பத்தியின் எதிர்காலம் முன்னெப்போதையும் விட பிரகாசமாக உள்ளது🌟” என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு தான் பவர் ஹவுஸ்!

இதனை சுட்டிக்காடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக (Power House) தமிழ்நாடு உள்ளது!

திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

அமித் ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ!

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் சூழலை மேம்படுத்துதல், தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share