“அரசு வேலை என்றாலே தேர்வு எழுதி, இன்டர்வியூ போய் மண்டை காய வேண்டுமா? மார்க் அடிப்படையில் ஈஸியாக ஒரு வேலை கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ‘கள உதவியாளர்’ (Field Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வே இல்லாமல், நீங்கள் பள்ளியில் எடுத்த மதிப்பெண்களை வைத்து மட்டுமே இந்த வேலை வழங்கப்படும் என்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய ‘ஹைலைட்’.
காலியிடங்கள் எவ்வளவு?
மாநிலம் முழுவதும் உள்ள பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அலுவலகங்களில் மொத்தம் 41 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கப் பெரிய பட்டப்படிப்புகள் எதுவும் தேவையில்லை.
- பிளஸ் 2 தேர்ச்சி: பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை (Science Group) எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாகத் தாவரவியல் (Botany) அல்லது விலங்கியல் (Zoology) அல்லது உயிரியல் (Biology) பாடங்களைப் படித்திருப்பது கட்டாயம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
- பொதுப் பிரிவினருக்கு (OC): 32 வயது வரை.
- எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு: 59 வயது வரை தளர்வு உண்டு. (அதாவது ஓய்வு பெறும் வயது வரை விண்ணப்பிக்கலாம்).
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் கள உதவியாளர்களுக்கு, ஊதிய நிலை-8 (Level-8) படி சம்பளம் வழங்கப்படும். இதன்படி, மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை சம்பளம் மற்றும் இதர படிகள் கிடைக்கும்.
செலக்ஷன் எப்படி?
முன்பே சொன்னது போல, எழுத்துத் தேர்வு (Written Exam) கிடையாது. நேர்காணலும் (Interview) கிடையாது.
நீங்கள் 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும். இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 23.12.2025.
12ஆம் வகுப்பில் நல்ல மார்க் வைத்திருப்பவர்கள், “கிடைக்குமா கிடைக்காதா” என்று யோசிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க. லக் இருந்தால் அரசு வேலை உங்கள் கையில்!
