தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், “சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது; இதனால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ செயல்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி ஒதுக்காததால் 43 லட்சம் மாணவர்களும் 2 லட்சம் ஆசிரியர்களும் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமக்ரா சிக்ஷா திட்டம் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020, பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையது அல்ல” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ளது.