எங்கும் அறிவியல் – தமிழ்நாட்டின் மற்றொரு முன்னெடுப்பு!

Published On:

| By Minnambalam Desk

TN Govt Vanavil Mandram

நா.மணி TN Govt Vanavil Mandram

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே மனித குல வாழ்வை மகத்தானதாக மாற்றி வருகிறது. கற்பனையிலும் எட்டாத கண்டுபிடிப்புகளை அது மேலும் மேலும் வழங்கி, வளம் சேர்த்து வருகிறது. ஆனால், அறிவியல் சிந்தனையும், அறிவியல் மனப்பான்மையுமே நாம் சந்தித்து வரும் பல்வேறு சமகால பிரச்சனைகளுக்கும், எதிர்கால சவால்களுக்கும் தீர்வு காணும் அருமருந்தாக அமையும்.

அறிவியல் மனப்பான்மையே, வறுமை, வேலையின்மை, கல்லாமை, மூடநம்பிக்கை, இயற்கை வளங்களை வீணாக்குதல் போன்றவற்றை தடுக்கவும், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை வளர்த்தெடுக்கும் கருவியாகவும் அமையும். TN Govt Vanavil Mandram

அறிவியல் மனப்பான்மையின் அவசியம் உணர்த்தப்பட்ட தருணம்

TN Govt Vanavil Mandram

அறிவியல் மனப்பான்மையின் அவசியம் பற்றி, முதன் முதலாக, 1946 ஆம் ஆண்டிலேயே நேரு பரிந்துரை செய்தார். ஆனால், 1976 ஆம் ஆண்டில் தான், 42வது அரசியல் சாசன சட்ட திருத்தம் வழியாக, இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக ‘அறிவியல் மனப்பான்மையை வளர்த்து எடுத்தல், என்பது மாறியது.

51-A(h) என்னும் அந்த அரசியல் சாசன திருத்தம், அறிவியல் “மனப்பான்மையை வளர்த்தெடுத்து, மனிதநேயத்தை வளர்த்தெடுக்க வேண்டும். தேடுதல் மனப்பாங்கை கொண்ட, மனங்களை வளர்த்தெடுப்பதும், அதன் வழியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்று அந்த அரசியல் சாசன சட்ட திருத்தம் பிரகடனம் செய்கிறது. பகுத்தறிவுவாதிகள், மக்கள் அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள் போன்றவர்களே இது பற்றி பல காலமாக பேசி வருகிறார்கள்.

அறிவியல் மனப்பான்மை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைக்கப்பட்டு விட்டது. அதன் பரந்த பொருள் நோக்கி பயணிக்கவில்லை. மக்கள் தங்களின் அரசியல் சாசன கடமையை நிறைவேற்ற அரசுகளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. கல்வி நிறுவனங்களில் கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் இந்த திசை வழியில் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கலாம். அரசியல் சாசன தினமான நவம்பர் 26ஐ ஒட்டி, தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை இதற்கான முன் முயற்சியை மேற்கொண்டது. TN Govt Vanavil Mandram

நாட்டிலேயே இத்தகைய பணியை முதன்முறையாக தமிழக அரசே முன்னெடுத்திருக்கிறது. “வானவில் மன்றம்” என்ற பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த செயல் திட்டத்தை திருச்சியில் தொடங்கி வைத்திருக்கிறார். T

TN Govt Vanavil Mandram

வானவில் மன்றங்கள் என்ன செய்கிறது? TN Govt Vanavil Mandram

மாநிலம் முழுவதும் உள்ள 13,236 நடுநிலைப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு இந்த திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது. TN Govt Vanavil Mandram

அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துதல், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் உள்ள கருத்துக்களை ஆழமாக சிந்திக்க வைத்தல். அவ்வாறு சிந்தித்த கருத்துக்களின் மீது தங்கள் திறன்களை வளர்த்து எடுத்துக் கொள்ள பயிற்சி அளித்தல். கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவித்தல். உற்சாகப்படுத்துதல். கேள்வி கேட்கும் திறனை வளர்த்தல். சிந்தனை திறன் மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது, கேள்வி கேட்கும் மனம் வேர் விட்டு துளிர் விட்டு துளிர்க்கும் போது, மாணவர்களை சிறிய சிறிய ஆய்வுகளில் ஈடுபடுத்துவது, ஆய்வு செய்ய தூண்டுவது, பள்ளி நேரம் முடிந்து, வீட்டுக்கு சென்ற பிறகும் கூட வீடுகளில் தங்கள் ஆய்வுகளை பரிசோதித்துப் பார்க்க உற்சாகமூட்டுவது. கோட்பாட்டை பல்வேறு தரவுகள், பல்வேறு பொருட்களைக் கொண்டு ஆய்வு செய்ய தூண்டுவது. இத்தகைய அடிப்படை நோக்கங்களைக் கொண்டு வானவில் மன்றங்கள் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையால் துவக்கி வைக்கப்பட்டது. TN Govt Vanavil Mandram

வானவில் மன்றங்கள் செயல்பட்டு வரும் விதம்

TN Govt Vanavil Mandram

ஒரு ஒன்றியத்திற்கு ஒரு கருத்தாளர் வீதம் 710 முழுநேர கருத்தாளர்களை (அறிவியல் தூதுவர்கள்) பள்ளிக் கல்வித்துறையால் பயிற்சி அளிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர். அவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளில் நன்கு பயிற்சி தரப்பட்டுள்ளது . தேவையான பரிசோதனை கருவிகளோடு பள்ளிகளுக்கு சென்று, பரிசோதனை வழியாக செய்து வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை இத்திட்டத்திற்கு வகுத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற இவர்கள் பாடுபட்டு வருகிறார்கள். TN Govt Vanavil Mandram

இவர்களுக்கான மதிப்பூதியம், பயணப்படி, பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை அரசு வழங்கியுள்ளது. பள்ளிகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற போதுமான நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தானாக முன்வந்து, அரசின் இத்திட்டம் வெற்றி பெற, பல்வேறு ஆலோசனைகளையும் தங்கள் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள் என்று, பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சி ஈடேறும் போது, இந்திய அரசியல் சாசனத்தின் 51 A (h) பிரிவு சொல்லும் கூற்றும் நிறைவேறும். “இவ்வாறு அனைத்து வகைகளிலும், தனிமனித முன்னேற்றத்திற்கும், கூட்டு முன்னேற்றத்திற்கும், முயன்று இத்திசை வழியில் வெற்றி கிடைத்தால், நாடு தொடர்ச்சியாக முன்னேற்ற பாதையில் எழுந்து நின்று பயணிக்கும். உயரிய சாதனைகளை படைக்கும் வல்லமையை பெறும்”.

பள்ளிக் கல்வி வழியாக அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க ஏற்ற பருவமும் ஆறு முதல் எட்டு வரை படிக்கும் வயதுடையவர்களே. அறிவியல் தொழில்நுட்பத்தின் கனிகளை அறிவியல் மனப்பான்மையோடு பயன்படுத்தும் போதே அதன் பயன் எல்லோருக்கும் சென்று சேரும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் வானவில் மன்றங்களின் செயல்பாடுகள்

28/11/2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட எளிய அறிவியல் பரிசோதனைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. வானவில் மன்றங்கள் வழியாக பயிற்சி பெற்ற மாணவர்களின் 1,000 செயல்பாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் 15,000 இடங்களில் அறிவியல் திருவிழாக்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடப்பட்டது. இதன் வழியாக சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் பயன் பெற்று இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் படைப்பாக்கத்தை அதிகரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றிய அளவில் தொடங்கி மாவட்டம் மாநிலம் என போட்டிகள் விஸ்தரிக்கப்பட்டது. மாநிலப் போட்டிகள் சென்னையில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உற்சாகம் ஊட்டினார். 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

2025-26 ஆம் ஆண்டிற்கான திட்டம் 1/07/2025 (நாளை) அன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இப்போது இந்தத் திட்டத்தில் யூனிசெப் நிறுவனமும் இணைய உள்ளது. ஆர்வமுள்ள சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு யூனிசெப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் பரிசோதனையாக செயல்படவுள்ளது. TN Govt Vanavil Mandram

1,500 பள்ளிகள் வழியாக ஒரு இலட்சம் மாணவர்களை சென்று சேர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் வெற்றி படிப்பினைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதே காலகட்டத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுக் கொள்வதில் கற்றுத் தருவதில் புதிய உத்திகள் பரிசோதித்து பார்க்கப்பட உள்ளது. மலை கிராமங்களிலும் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

வானவில் மன்றங்கள் வழியாக எதிர்பார்க்கப்படும் முக்கிய விளைவுகள்

அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பனைக்கு எட்டாத அளவு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், அது மூடநம்பிக்கைகள் தவறான நம்பிக்கைகளை ஒழிக்க பயன்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் சில விஞ்ஞானிகளிடம் கூட மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன‌.

இது நாட்டின் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கிறது. எது ஆரோக்கியமான அரசியல்? எது உண்மையான அரசியல்? எவ்வகையான அரசியல் மனிதகுல வளர்ச்சிக்கு உதவும். எது மனிதகுல வளர்சியை பின்னோக்கி இழுக்கும் என்பதும் அறிவியல் மனப்பாங்கின் முக்கியப் பகுதி. அத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் மனப்பான்மையை தனியாக வளர்த்தெடுக்க முடியாது.

ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகள் வழியாக கற்றுக் கொள்வது, அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகளை உற்று நோக்குவது சமூகம் வளர்ச்சியடைய பயன்படும். அத்தகைய அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வானவில் மன்றம் ஓர் முக்கிய முன்னெடுப்பு.

கட்டுரையாளர்:

Professor N Mani TN Govt Vanavil Mandram

பேராசிரியர் ந.மணி, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share