“குரூப்-4 தேர்வுல ஈஸியா வேலை வாங்கணும்னா டைப்ரைட்டிங் முடிச்சிருக்கணும்னு சீனியர்ஸ் சொல்லுவாங்களே… அந்தச் சான்ஸ் இப்போ வந்துருச்சு!” அரசு வேலை கனவோடு இருக்கும் இளைஞர்களே, இதோ உங்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை (DOTE), 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு (Typewriting), சுருக்கெழுத்து (Shorthand) மற்றும் கணக்கியல் (Accountancy) தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டுள்ளது.
டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆகத் துடிக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இது ஒரு ‘குட் நியூஸ்’!
விண்ணப்பம் தொடக்கம்:
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நேற்று தொடங்கியது. ஆர்வமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2026
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tndtegteonline.in
தேர்வு அட்டவணை (Feb 2026):
வழக்கமான முறை (Traditional Method) தேர்வுகள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும்:
சுருக்கெழுத்து (Shorthand):
உயர் வேகம் (High Speed) மற்றும் இதர நிலைகள்: பிப்ரவரி 7 மற்றும் 8, 2026.
கணக்கியல் (Accountancy): பிப்ரவரி 9, 2026.
தட்டச்சு (Typewriting):
ஜூனியர், சீனியர் மற்றும் ப்ரீ-ஜூனியர் நிலைகள்: பிப்ரவரி 14 மற்றும் 15, 2026.
இதுதவிர, கணினி வழித் தேர்வுகள் (CBT) மற்றும் அரசு கணினிச் சான்றிதழ் தேர்வு (COA) ஆகியவை பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் எழுதலாம்?
- 6, 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் (நிலைக்கு ஏற்ப) விண்ணப்பிக்கலாம்.
- தனியார் பயிலும் மாணவர்கள் (Private Candidates) மற்றும் இன்ஸ்டிட்யூட் மூலமாகப் பயிலும் மாணவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
குரூப்-4 கவுன்சிலிங்ல டைப்பிஸ்ட் போஸ்டிங் தான் நிறைய இருக்கும். ஒருவேளை உங்க மார்க் கொஞ்சம் கம்மியா இருந்தாக் கூட, டைப்ரைட்டிங் முடிச்சிருந்தா ஈஸியா உள்ள போயிடலாம். குறிப்பா, ‘போத் ஹையர்’ (Both Higher) முடிச்சு வைப்பது ரொம்ப சேஃப்.
இன்னொரு முக்கியமான விஷயம், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 19 வரைக்கும் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. கடைசி நேரத்துல சர்வர் பிஸியாகிவிடும். அதனால, இன்றே அல்லது நாளையே அப்ளை பண்ணிடுங்க. அப்ளை பண்ணும்போது பேர், பிறந்த தேதி எல்லாம் சான்றிதழ்ல இருக்கிற மாதிரி கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. ஆல் தி பெஸ்ட்!
