திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Tirunelveli–Mettupalayam Train
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் 06029 ஜூலை 7-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை தொடர்ந்து இயங்கும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06030 மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
2022-ம் ஆண்டு முதல் இயக்கப்படும் இந்த ரயில் சேவை ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.