திருச்செங்கோடு தொகுதியில் போட்டி: தவெக அருண்ராஜ்

Published On:

| By Mathi

Arunraj TVK

திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் தாம் போட்டியிட விரும்புவதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அருண்ராஜ் பேசியதாவது: ஆட்சி அதிகாரம் மட்டுமே விஜய்யின் நோக்கமல்ல. அடிப்படை அரசியல் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவரோட நோக்கம்.

நம் வருங்கால சந்ததியினர், நம் எதிர்காலம் நல்லா இருக்கணும், அதற்கு அடிப்படை அரசியல் மாற்றம் தேவை அப்படிங்கிற உயர்ந்த நோக்கோடு விஜய் இந்த கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

ஒரு சமூக மாற்றம் வரணும்னா நம்ம எல்லாருக்குமே பொறுப்பு இருக்கு. உண்டா இல்லையா? ஒருத்தர் மட்டும் நிகழ்த்த முடியாது. விஜய் நினைச்சா மட்டும் நிகழ்த்த முடியாது. கட்சி நிர்வாகிகள் நினைச்சா மட்டும் நிகழ்த்த முடியாது. பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் சேர்ந்து தான் இதை நிகழ்த்த முடியும். அவர் எடுத்திருக்கிறது ஒரு மிகப்பெரிய பெரும் பொறுப்பு.. அந்த பொறுப்புக்கு அவர் கூட நாம எல்லாம் துணை நிற்கணும். நம்மால முடிந்தது நீங்களா சிந்திச்சு ஓட்டு போடணும். சிந்திச்சு ஓட்டு போட்டீங்கன்னா ஒரு நல்ல தலைவரை நீங்க தேர்ந்தெடுக்க முடியும். நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதின் மூலம் ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் பெற முடியும்.

என் அன்பான திருச்செங்கோடு மக்களே… திருச்செங்கோட்டுல யார் போட்டியிடப் போறாங்கங்கிற ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு. நான் விருப்ப மனு வாங்கியிருக்கேன்.

ADVERTISEMENT

என்னோட விருப்பம் திருச்செங்கோடு தொகுதியில போட்டியிடுறதுதான். இதற்கு விஜய் வாய்ப்புக் கொடுத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இதுதான் என்னோட பூர்வீகமே. இங்க இருக்கிற மல்லசமுத்திரத்தில் இருக்கிற கோட்டப்பாளையம்தான் என்னோட பூர்வீகம். என் பேருக்கு முன்னால் இருக்கிற K-க்கு அர்த்தமே இந்த ‘கோட்டப்பாளையம்’தான். என்னோட பாஸ்போர்ட்லயே கோட்டப்பாளையம் கணேசன் அருண்ராஜ்னுதான் இருக்கு.

ADVERTISEMENT

என்னோட வாழ்க்கையில முக்கியமான கட்டங்களில் நான் என்னோட குலதெய்வம் கோயிலுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கும் வந்திருக்கேன். முன்னாடி பேசினவங்க சொன்ன மாதிரி நான் பிளஸ் டூ-ல ஸ்டேட் செகண்ட் வாங்குனப்பவும் இந்தக் கோயிலுக்கு வந்து நான் ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன். அதே மாதிரி சிவில் சர்வீஸ் கிளியர் பண்ணி நான் ஐ.ஆர்.எஸ் செலக்ட் ஆகுறப்பவும் நான் இங்க வந்து அர்த்தநாரீஸ்வரர் கோயிலை வணங்கிட்டுதான் போயிருக்கேன். அதே மாதிரி நான் அரசியலுக்கு வந்தப்பவும் என்னோட முதல் தேர்தல் திருச்செங்கோடு தொகுதியில்தான் இருக்க வேண்டும் என்று இந்த அர்த்தநாரீஸ்வரர் அவர்களிடம் வேண்டி இருக்கிறேன். நிச்சயமாக நல்லது நடக்கும். இவ்வாறு அருண்ராஜ் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share