துடரும்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Thudarum Malayalam Movie Review in Tamil

‘விண்டேஜ்’ மோகன்லால் இஸ் பேக்..! Thudarum Malayalam Movie Review in Tamil

மலையாளத் திரையுலகில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து தங்களுக்கே சொந்தம் என்று இதுநாள் வரை ‘மியூசிகல் சேர்’ ஆடிக் கொண்டிருக்கின்றனர் மம்முட்டியும் மோகன்லாலும். கடந்த இரண்டாண்டுகளாக யதார்த்தமான கதையம்சம் உள்ள, வித்தியாசமான திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொண்ட திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறார் மம்முட்டி. மாறாக, பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அதீத மெலோட்ராமாக்களுக்கும் தனது பங்களிப்பைத் தருகிறார் மோகன்லால். Thudarum Malayalam Movie Review in Tamil

இந்த நிலையில், ‘இன்னொரு த்ருஷ்யம்’ என்று சொல்லும் அளவுக்குத் திரையனுபவத்தைத் தருகிறது மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோரின் நடிப்பில், தருண்மூர்த்தி இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘துடரும்’ திரைப்படம். Thudarum Malayalam Movie Review in Tamil

இப்படிச் சொல்லும் அளவுக்கு ‘துடரும்’மில் என்ன இருக்கிறது?

ஒரு ’சாதாரணமானவனின்’ கதை!

Thudarum Malayalam Movie Review in Tamil

வெளிப்பார்வைக்குச் சாதாரணமானவர்களாகத் தோற்றமளிக்கும் பலர், உள்ளுக்கும் ‘அதீத ஹீரோயிசம்’ மிக்கவர்களாக விளங்குகின்றனர். அப்படியொரு நிலைக்கு ஒரு மனிதன் உள்ளாவதைக் காட்டுகிறது ‘துடரும்’. Thudarum Malayalam Movie Review in Tamil

மனைவி லலிதா (ஷோபனா), கல்லூரியில் படிக்கும் மகன் (தாமஸ் மேத்யூ), பள்ளியில் படிக்கும்போதே இன்ஸ்டாரீல்ஸில் மோகம் கொண்டு திரியும் மகள் என்று ஒரு சாதாரண வாழ்வை மேற்கொண்டு வருகிறார் கார் ஓட்டி பிழைப்பு நடத்தும் சண்முகம் என்ற பென்ஸ் (மோகன்லால்). அவர் ஓட்டுகிற அம்பாசிடர் காரை பார்த்துவிட்டு, ஊரார் அவருக்கு வைத்த பெயரே பென்ஸ். Thudarum Malayalam Movie Review in Tamil

ஒருநாள், வேறொரு நபர் செய்த குற்றத்திற்காக பென்ஸின் காரை பறிமுதல் செய்கிறார் எஸ்.ஐ. பென்னி (பினு பாப்பு). அவரிடம் பென்ஸ் கெஞ்சிக் கூத்தாடியும், அந்த காரை அவர் தருவதாக இல்லை. Thudarum Malayalam Movie Review in Tamil

ஒருகாலத்தில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாக வேலை பார்த்த நினைவுகளின் எச்சமாக, மாஸ்டர் பழனி (பாரதிராஜா) சண்முகத்திற்குத் தந்த கார் அது. அதனைத் தனது உயிராக அவர் கருதுகிறார். எப்பாடுபட்டாவது அதனைத் திரும்பப் பெறுவது என்று முடிவு செய்கிறார்.

இரண்டு நாட்களாக உள்ளூர் பிரமுகர்கள் உதவியோடு பென்ஸ் செய்த முயற்சிகள் பலனற்றுப் போகின்றன. அன்றிரவு அவர் நேரில் காவல்நிலையம் செல்கிறார்.

விடுமுறையில் சென்ற இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் (பிரகாஷ் வர்மா) அன்று பணியில் இருக்கிறார். தன்னைத் தேடி வந்த பென்ஸை காணும் அவர், என்ன ஏதுவென்று விசாரிக்கிறார். பென்னியிடம் சொல்லி அந்த காரை கொடுக்குமாறு கூறுகிறார். அதற்கு பென்னி சம்மதிப்பதாக இல்லை. Thudarum Malayalam Movie Review in Tamil

ஆனாலும், ‘அவன்கிட்ட சாவிய கொடுடா’ என்கிறார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ். அப்போது, அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார் பென்னி. Thudarum Malayalam Movie Review in Tamil

சில நொடிகள் கழித்து, ‘கான்ஸ்டபிள் வீட்டுக் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்குதே’ என்று சொல்லி பென்ஸின் காரில் ஜார்ஜும் பென்னியும் ஏறுகின்றனர். மூவரும் கல்யாண வீட்டுக்குச் செல்கின்றனர். Thudarum Malayalam Movie Review in Tamil

சில மணி நேரம் கழித்து, ‘அப்படியே பக்கத்துல இருக்கிற பண்ணை வீடு வரைக்கும் ஒரு காரியமா போக வேண்டியிருக்குதே’ என்கிறார் ஜார்ஜ். அதற்கு மறுப்பு சொல்ல முடியாமல், அவர்களோடு பயணிக்கிறார் பென்ஸ். Thudarum Malayalam Movie Review in Tamil

இந்த முறை அந்த கான்ஸ்டபிளும் (பர்ஹான் பாசில்) அவர்களோடு காரில் ஏறிக் கொள்கிறார்.

சில மைல் தூரம் சென்றதும், நேர் பாதையை விட்டு விலகி இன்னொரு பாதையில் போகச் சொல்கிறார் ஜார்ஜ். மேடு பள்ளம், புதர் செடிகள், நீரோடை தாண்டிச் செல்கிறது அந்த பாதை.

Thudarum Malayalam Movie Review in Tamil

காரில் விழும் கீறல்களைக் கண்டு மனம் சகிக்காத பென்ஸ், ‘இதுக்கு மேல நடந்து போங்க, என்னால காரை ஓட்ட முடியாது’ என்று முரண்டு பிடிக்கிறார்.

காரை விட்டுக் கீழிறங்கும் ஜார்ஜ், நேராகச் சென்று பென்ஸின் சட்டையைப் பிடித்து வெளியே இழுக்கிறார். ‘கார் டிக்கியில ஒரு பொணம் கிடக்குது, அதை மாதிரி ஒண்ணையும் இல்லாம ஆக்கணுமா’ என்கிறார்.

அந்த நொடியில், பாதத்தின் கீழுள்ள தரை நழுவியதாக உணர்கிறார் பென்ஸ். அவர்கள் தூக்கிச் சொல்கிற சடலத்தின் முகத்தைப் பார்க்கிற திராணி கூட அவருக்கு இல்லை.

அந்த அனுபவம் பென்ஸின் தினசரி வாழ்வைச் சிதைத்துப் போடுகிறது. அவரால் நிம்மதியாக  உண்ண, உறங்க, அனைவரிடமும் உரையாட முடிவதில்லை.

இந்த நிலையில், மீண்டும் பென்னி மற்றும் ஜார்ஜை பென்ஸ் எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன் தொடர்ச்சியாக, அவரது குடும்பத்தையே வேரோடு சாய்க்க அவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர்.

அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘துடரும்’ மீதி.

நான்கு வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘துடரும்’ பட ட்ரெய்லர், ‘இது ஒரு மெலோட்ராமா’ என்றே சொல்வதாக இருந்தது. ஆனாலும், அதனுள் சிறு மர்மம் புதைந்து கிடப்பதை உணர்த்தியது.

அதனை அடிக்கோடிடும் வகையில், ஒரு ‘க்ரைம் த்ரில்லர் ட்ராமா’வாக அமைந்திருக்கிறது ‘துடரும்’. தியேட்டரில் அதனை ரசிகர்கள் உணர்கிற தருணங்களும், அதன்பின் வருகிற காட்சிகளும் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களாக அமையும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

லாலேட்டனின் ‘ஹீரோயிசம்’!

Thudarum Malayalam Movie Review in Tamil

கண்ணைக் கவரும் ஆடைகளும் கூலர்ஸும் அணிந்து, ஸ்லோமோஷனில் நடந்து வந்து, துப்பாக்கி மழையினூடே வில்லன் கூட்டத்தைப் பார்த்து ‘பஞ்ச்’ பேசுகிற ‘ஹீரோயிசம்’ ஒருகட்டத்தில் போரடித்துவிடும். Thudarum Malayalam Movie Review in Tamil

‘ஒரு சாதாரண மனுஷன் இருந்தான், வாழ்ந்தான், திடீர்னு ஒருநாள் அடிச்சான் பாரு..’ என்கிறபோது கிடைக்கிற ‘ஆக்‌ஷன் ப்ளாக்’ தான் ஒரு படத்தைத் தூணாகத் தாங்கும். அந்த வகையில், இப்படத்தில் காவல்நிலையத்தில் நிகழ்வதாக ஒரு சண்டைக்காட்சி வருகிறது.

அதிலொரு ஷாட்டில், உடைந்த ஜன்னல் வழியே ஒரு கையை ஊன்றி லாலேட்டன் எம்பிக் குதிக்கிறபோது, நம்மையும் அறியாமல் விசிலடிக்கத் தோன்றுகிறது.

நம்மூரில் இருக்கும் மூத்த நட்சத்திர நடிகர்களும் இது போன்ற கதைத் தேர்வினைப் பின்பற்றினால், அவர்களுக்கும் இது போன்ற வரவேற்பைத் தரலாம். குறைந்தபட்சமாக, இரண்டொரு படங்களுக்கு ஒருமுறை இது போன்ற கதைகளில் பங்கேற்கலாம்.

ஷோபனா இதில் நாயகி. அவரது முகத்தில் பூசியிருக்கும் ஒப்பனை முதுமையை வெளிக்காட்டினாலும், நடிப்பில் அது கொஞ்சம் கூடத் தெரிவதில்லை.

இந்தப் படத்தில் இளவரசு, பாரதிராஜா உள்ளிட்ட சில தமிழ் கலைஞர்கள் சிலர் தலைகாட்டியிருக்கின்றனர்.

மலையாள சினிமாவின் ‘யங் சென்சேஷன்’ ஆக விளங்கும் சந்தோஷ் பிரதாப், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இதில் ‘கௌரவமாக’த் தலைகாட்டியிருக்கின்றனர்.

பிரகாஷ் வர்மா, பினு பாப்பு, தாமஸ் மேத்யூ, பர்ஹான் பாசில், மணியன்பிள்ளா ராஜு, இர்ஷாத் அலி, ஆர்ஷா சாந்தினி பைஜு உட்படப் பலர் இப்படத்தில் உண்டு.

ஏற்கனவே தருண் மூர்த்தியின் ‘ஆபரேஷன் ஜாவா’ வழியே நல்லதொரு நடிகராக அடையாளம் காணப்பட்டவர் பினு பாப்பு. இதில் தனது பாத்திரத்தை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஆனால், அனைவரையும் தாண்டி நம்மை ஸ்தம்பிக்க வைப்பது பிரகாஷ் வர்மாவின் நடிப்புதான். ‘என்னா நடிப்பு’ என்று சொல்கிற வகையில் அமைந்திருக்கிறது அவரது திரை இருப்பு.

Thudarum Malayalam Movie Review in Tamil

குயுக்திகள் மிக்க, வன்மமான, சிரித்த முகத்துடன் எதிர்ப்படும் அனைவரையும் ‘யூஸ் அண்ட் த்ரோ’வாக கருதுகிற ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரம். மனிதர் விளையாடியிருக்கிறார். இதுநாள்வரை ‘வோடபோன் ஜுஜு’ உட்படப் பல விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவரை, இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர். நல்வரவு!

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், படத்தொகுப்பாளர்கள் மறைந்த நிஷாத் யூசுஃப் மற்றும் ஷபீக், தயாரிப்பு வடிவமைப்பாளர் கோகுல்தாஸ் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்போடு தனது திரைக்கதைக்கான உலகைப் படைத்திருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி.

அதில் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசைக்கும் ஒரு பங்குண்டு. இரண்டு பாடல்கள் மெலடியாக அமைந்து தாலாட்ட, க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் வரும் பாடல் உக்கிரத்தை வெளிக்காட்ட உதவியிருக்கிறது.

கே.ஆர்.சுனில் எழுதிய கதைக்கு, அவருடன் இணைந்து திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி.

என்னதான் திரைக்கதையானது ‘யதார்த்தம்’ என்று எண்ண வைக்கும் அளவுக்குப் படைக்கப்பட்டிருந்தாலும், இதிலும் ‘சினிமாத்தனமான’ மொமண்ட்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றை லாஜிக் மீறல்களாக கருதாத அளவுக்குத் தக்க மனநிலையைத் தனது கதை சொல்லல் வழியே தருண் மூர்த்தி நிகழ்த்திவிடுகிறார்.

இந்த படத்தில் பெரும்பாலான பாத்திரங்கள் தகுந்த பின்னணியுடன் காட்டப்பட்டிருக்கின்றன.

மோகன்லால் ஏற்ற நாயக பாத்திரத்தைக் காட்டும்போது, அவரது தந்தை கம்பத்தைச் சேர்ந்தவர், சென்னையில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்தவர், இளையராஜாவின் பாடல்களை காரில் ஒலிக்க விட்டுக் கேட்பவர், தீவிர முருக பக்தர் என்பது போன்ற விஷயங்களை பார்த்து பார்த்துச் சேர்த்திருக்கிறார் இயக்குனர். அவை தமிழ்நாட்டுடன் அப்பாத்திரத்தைத் தொடர்புபடுத்துவதாக இருக்கிறது.

அது போதாதென்று ஷோபனா பேசுகிற வசனங்களில் பெரும்பகுதி தமிழ் கலந்ததாக இருக்கிறது.

‘நீ இளையராஜா ரசிகனா’ என்று வில்லன் பாத்திரம் கேட்கையில், ‘அவரோட பாட்டை கேட்காம என்னோட ஒருநாள் பொழுது எப்படி கழியும்’ என்று நாயகன் மோகன்லால் பேசுவதாக ஒரு வசனம் உண்டு. இப்படி ராஜா புகழ் பாடுகிற இடங்களும் இதிலுண்டு.

அது போன்ற விஷயங்களைத் தாண்டி, தொண்ணூறுகளுக்குப் பிறகு மோகன்லால் நடித்த ‘யதார்த்தவாத’ திரைக்கதைகளை, அந்தப் பின்னணியில் அமைந்த ஆக்‌ஷன் திரைப்படங்களை மீளாக்கம் செய்த உணர்வைத் தருகிறது ‘துடரும்’.

‘விண்டேஜ் மோகன்லால் இஸ் பேக்’ என்று சொல்கிற வகையில் அமைந்த இப்படத்தின் காட்சியாக்கம் அந்த மாயாஜாலத்தை செய்கிறது.

இப்படத்தைப் பார்க்கிற சில ரசிகர்கள், ‘இது த்ருஷ்யம் மாதிரி இருக்கு’ என்று சொல்லலாம். ஆனால், இப்படத்தில் மோகன்லால், ஷோபனாவின் நடிப்பு அதையும் தாண்டி உணர்வுப்பூர்வமாக நம்மைத் திரையுடன் ஒன்ற வைக்கிறது.

‘அது போதுமே’ என்பவர்களுக்கு விருந்து பரிமாறவல்லது இந்த ‘துடரும்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share