ADVERTISEMENT

திருவாரூர் கருவாடாக காய்கிறது : விஜய் விமர்சனம்!

Published On:

| By Kavi

முதல்வர் திருவாரூரை சொந்த மாவட்டம் என்கிறார். ஆனால் இந்த மாவட்டம் கருவாடாக காய்கிறது என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

நாகை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 20) மாலை திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

நாகையில் இருந்து திருவாரூர் வந்ததும், அங்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலையை அணிவித்து விஜய்யை தவெக தொண்டர்கள் வரவேற்றனர்.

அலைமோதும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே விஜய்யின் பிரச்சாரம் வாகனம் ஊர்ந்து வந்து திருவாரூர் தெற்கு வீதியை அடைந்தது.

ADVERTISEMENT

அங்கு பேசிய விஜய், “திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோயிலும், ஆழித்தேரும் தான் நினைவுக்கு வரும். திருவாரூர் தேர் என்றால் சும்மாவா… இந்த மண்ணின் அடையாளமாச்சே…

ரொம்ப நாளா ஓடாத இருந்த திருவாரூர் தேர, ஓட்டுநது நான்தானு மார்த்தட்டி சொன்னது யார்னு உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும். ஆனால் அவருடைய மகனான சி.எம். இப்ப என்ன செய்யுறாரு.

ADVERTISEMENT

நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாளா பக்கமும் கட்டைய போட்டு ஆடாம அசையாம நிறுத்திட்டாரு. இதை சவாலாக வேறு சொல்லிக்கொள்கிறார். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடா காயுது.

அதை கண்டுக்கவே மாட்டிகிறாங்க. உங்க அப்பா பேர்ல பேனா வைக்கணும்னு சொல்றாங்க… உங்க அப்பா பேர எல்லாத்துக்கு வச்சிகிறீங்க… ஆனால் ஒரு அடிப்படை சாலை வசதிகூட அவர் பிறந்த திரூவாரூரில் இல்ல.

நாகை போலவே அதிக குடிசைப்பகுதிகள் உள்ள மாவட்டம் திருவாரூர்.

இங்குள்ள பல்கலையில் எல்லா துறையும் இருக்கா? இருக்காதே?

இங்கிருக்க மெடிக்கல் காலேஜுக்கே வைத்தியம் பாக்கிற நிலைமைல தான் இருக்கு… அந்த மெடிக்கல் காலேஜ்ல எல்லா எக்யூப்மெண்ட்ஸும் வேலை செய்யுதா…செய்யாதே?

திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நெடுஞ்சாலைக்கு கூட சரியாக சாலை இல்லை.

கும்பகோணம், ஜெயங்கொண்டம், விருத்தாசலத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை 50 வருஷமா நிறைவேறாம இருக்கு.

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு. அவருடைய வேலை என்ன தெரியுமா. சிஎம் குடும்பத்துக்கு சேவை செய்யுறதுதான் வேலை”என்று கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share