திருப்புவனம் இளைஞர் மரணம்… சிபிசிஐடிக்கு மாற்றம்!

Published On:

| By Selvam

Thirupuvanam custodial death case

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். Thirupuvanam custodial death case

கடந்த ஜூன் 27-ஆம் தேதி நகை காணாமல் போன வழக்கில் விசாரிப்பதற்காக அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்தநிலையில், ஜூன் 28-ஆம் தேதி அஜித் குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அஜித் குமார் உயிரிழந்தது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்தசூழலில், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில், அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். காவல் நிலைய விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.irupuvanam custodial death case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share