திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Ajithkumar Lockup death CBI Stalin
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திருப்புவனம் காவல் நிலைய மரண சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், எந்த ஐயப்பாடும் எழுந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல்
முன்னதாக, அஜித்குமார் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறினார்.