விமான விபத்து : பறந்து வந்து விழுந்த விமானியை காப்பாற்றிய இளைஞர்கள்!

Published On:

| By Kavi

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று புதுக்கோட்டையில் சிறிய வகை போர் விமானம் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய நிலையில் இன்று இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரம் பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிலாட்டஸ் பிசி-7 மார்க் II ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

திருப்போரூர்-நெம்மேலி சாலையில், ஒரு உப்புத் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.  விமானம் அப்பகுதியில் இருந்த பழைய தொழிற்சாலை ஒன்றில் மோதியதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஆனால் தாம்பரத்தில் இருந்து கிளம்பி வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

விமானி உடனடியாக பாராசூட் மூலம் பத்திரமாக குதித்து உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்தால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்துக் குறித்து காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு (COI) உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் பாராசூட் மூலம் குதித்த விமானியை காப்பாற்றிய திருப்போரூரைச் சேர்ந்த மவுலீஸ் கூறுகையில், ‘நானும் என் தம்பியும் களனிக்கு சென்று கொண்டிருந்தோம் அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் ஏரோப்ளேன் விழுந்து கிடந்தது. விமானி பறந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சென்று ஹார்ன் அடித்து அவரை கீழே வர சொன்னோம், வந்ததும் அவரை நானும் தம்பியும் தான் பிடித்தோம். மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். அவருக்கு தண்னீர் கொடுத்து முதுகில் தட்டி கொடுத்தோம். அதன் பிறகு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்” என்றார்.

இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று, திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலை அருகே ஒரு சிறிய வகை போர் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி சாதுரியமாகச் செயல்பட்டு நெடுஞ்சாலையில் விமானத்தைத் தரையிறக்கியுள்ளார். விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறினர்.

விமானம் தரையிறக்கப்பட்டபோது, நெடுஞ்சாலையில் வேறு எந்த வாகனங்களும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் விமானப் பயிற்சி மையத்திலிருந்து இந்த விமானம் வந்ததாக திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்து இப்படி விமானங்கள் தரையிறங்குவதும், விபத்துக்குள்ளாவதும் விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share