திருப்பரங்குன்றம் மலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். Thiruparankundram Hill case
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், சிக்கந்தர் தர்கா என இரண்டு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழிகளை பலியிட கூடாது, மலையில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு பின் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 24) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்க கூடிய மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார்.
இதே விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் தனது உத்தரவில் தெரிவித்தார்.
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்ட உத்தரவிற்கு முரண்படுவதாக நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார்.
இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.
புதிய அமர்வில் இந்த வழக்குகளை விசாரணை செய்வதற்காக தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் மலை வழக்கு புது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Thiruparankundram Hill case
