வாதாடிய திருமா… உன்னிப்பாக கேட்ட ஸ்டாலின் – நம்பிக்கையுடன் சிறுத்தைகள்!

Published On:

| By Kavi

திமுக – விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த 2021 தேர்தலை விட, இந்த முறை திமுக தனது பலத்தை மேலும் நிலைநாட்டி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளும் இணைந்துள்ளன. மொத்தம் 21 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது. 

ADVERTISEMENT

இதுவரை காங்கிரஸ்(28+1), மதிமுக -4 ஐயூஎம்எல்.- 2 .மமக -2 , கொமதக-2, இந்திய கம்யூனிஸ்ட் 5 என 43 தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்துள்ளது. 

இன்னும் விசிக, சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. 

ADVERTISEMENT

திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் விசிக பேச்சுவார்த்தை குழு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இந்த முறை தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் குறைந்தது 10 தொகுதிகளாவது வேண்டும் என்று  கேட்டுள்ளது. 

ஆனால் புதிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இணைந்துள்ளதால், பிற கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுத்த திமுக விசிகவுக்கு 5 இடங்கள் தருகிறோம் என்று பேசியது. 

ADVERTISEMENT

இதற்கு விசிக ஒத்துவராத நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன், சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் எம்.பி.ஆகியோர் இன்று (மார்ச் 19) ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து பேசினர். 

வழக்கமாக கூட்டணி இறுதியாவதாக இருந்தால் அண்ணா அறிவாலயத்துக்குதான் கூட்டணி கட்சியினர் வருவார்கள்.

ஆனால் முதல்வர் இல்லத்துக்கு சென்ற திருமாவளவன்,  விசிகவுக்கு ஏன் அதிக தொகுதிகள்  வேண்டும் என்ற நியாயங்களை சொல்லி முதல்வரிடம் உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.  இதை உன்னிப்பாக கேட்ட ஸ்டாலின்,  ‘நீங்கள் இவ்வளவு சொல்லணுமா… இத்தனை வருஷமாக ஒன்றாக பயணித்திருக்கிறோம். நல்ல முடிவு எடுக்கப்படும் ’ என சொல்லியிருக்கிறார். 

அந்தவகையில் இன்றைய சந்திப்பு இணக்கமாத்தான் இருந்துள்ளது. 

அதாவது விசிக 10 சீட்  கேட்டு கோரிக்கை வைத்து வந்த நிலையிலும், திமுக 5 சீட் தான் என்று சொல்லி வந்த நிலையிலும் இன்றைய சந்திப்பில் நல்ல முடிவெடுக்கப்படும் என்று ஸ்டாலின் திருமாவளவனுக்கு நம்பிக்கை தந்திருக்கிறார். 

இந்த முடிவு விசிக தொண்டர்களையும், திருமாவளவன் மீது அபிமானம் கொண்டவர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share