இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கா? மத்திய அரசின் பதில் இதுதான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

There is no oil shortage in the country government has dismissed rumors

ஈரான்-இஸ்ரேல் போர் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை (fuel shortages) மற்றும் ஊரடங்கு (lockdown) குறித்த வதந்திகள் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், நம் நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு விநியோகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம்:

பெட்ரோல், டீசல் மற்றும் LPG ஆகியவற்றின் போதுமான கையிருப்பு இந்தியாவில் உள்ளது என்று அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. அடுத்த 60 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 100,000 பெட்ரோல் பம்புகள் (அவற்றில் 91,000 அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை) தொடர்ந்து தடையற்ற விநியோகத்தை வழங்கி வருகின்றன.

ADVERTISEMENT

LPG குறித்த முக்கியத் தகவல்:

வர்த்தக எரிவாயு பற்றாக்குறை குறித்த செய்திகள் தொடர்பாக, 70% வர்த்தக LPG விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரையில் 30,000 டன் எரிவாயு வணிக சிலிண்டர் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் பீதியுடன் முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் பரவி வரும் நாடு தழுவிய பொதுமுடக்கம் குறித்த வதந்திகளையும் மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. நாடு தழுவிய பொது முடக்கத்திற்குத் தேவையில்லை என்றும், அது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொள்வதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்திடம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share