ஜகதீப் தன்கரின் பதவி விலகல் சொல்லும் உண்மைகள்!

Published On:

| By Minnambalam Desk

மோடியின் நம்பத் தகுந்த கையாளாகச் செயல்பட்டுவந்த ஜக்தீப் தன்கர் திடீரென்று ராஜினாமா செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. Jagdeep Dhankars resignation

வீர் சங்வி Jagdeep Dhankars resignation

ஜகதீப் தன்கர் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகியது துரதிர்ஷ்டவசமான திடீர் முடிவாகும். அவர் மகிழ்ச்சியோடு விடைபெறவில்லை என்பது தெளிவு. உடல்நலக் குறைவும் முதன்மைக் காரணம் அல்ல. அவரது அலுவலகம் அடுத்த நாட்களுக்கான தனது திட்ட விவரங்களை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே அவர் ராஜினாமா செய்தது, அவர் வெளியேற்றப்பட்டார் அல்லது வெளியேற்றப்படுவதற்கு முன்பு தானாகவே வெளியேறினார் என்பதைக் காட்டுகிறது. Jagdeep Dhankars resignation

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் பொதுவாக வினயமாக வெளிப்படும் பிரதமர் நரேந்திர மோடி, தன்கர் ராஜினாமா செய்தபோது தனது எக்ஸ் தளத்தில் பாசமான பிரியாவிடைச் செய்தியைப் பகிரவில்லை. மாறாக, அடுத்த நாள் வரை காத்திருந்து ஒரு அசாதாரணமான விதத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டார். தன்கருக்கு நாட்டிற்கு சேவை செய்யப் பல வாய்ப்புகள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர் ஆரோக்கியமாக வாழட்டும் என்று வாழ்த்தினார். இது தற்போதைய அரசாங்கம், அதன் செயல்பாடுகள் குறித்து மூன்று முக்கியமான விஷயங்களை நமக்குச் சொல்கிறது. Jagdeep Dhankars resignation

திட்டங்களைச் சீர்குலைப்பவரா? Jagdeep Dhankars resignation

ADVERTISEMENT

தன்கர் பிரதமர் பார்வையில் ஒரு “பெரிய தவறு” செய்துள்ளார். அவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து வந்த திட்டமிட்ட கசிவுகளின்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சியுடன் இதற்குத் தொடர்பு இருக்கலாம். நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்ததால், பதவி நீக்க நடவடிக்கைகள்தான் அடுத்த தர்க்கரீதியான நடவடிக்கையாக இருக்கும். எதிர்க்கட்சிகள் நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான அறிவிப்பைச் சமர்ப்பித்தன. தன்கர், மாநிலங்களவைத் தலைவராக அதை ஏற்றுக்கொண்டார்.

கசிந்த தகவல்களின்படி, தன்கர் எதிர்க்கட்சியின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் நன்கு வகுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றைக் கெடுத்துவிட்டார். அரசாங்கம் நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவரது உதாரணத்தைப் பயன்படுத்தி நீதித்துறையின் மீது பரந்த தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டிருந்தது. எதிர்க்கட்சியை முதல் அடியை எடுக்க அனுமதிப்பதன் மூலம், தன்கர் இந்தத் திட்டத்தைச் சீர்குலைத்தார். அன்று மாலை அதிகாரத்தில் இருந்த ஒருவர் தன்கரை அழைத்துப் பேசியதாகச் செய்திகள் வந்தன. கோபமான வார்த்தைகள் பரிமாறப்பட்டன. தன்கர் ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார் அல்லது வேறு வழியில்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ADVERTISEMENT

இந்தச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பட்டுள்ளன. எனினும் இதை நம்புவது கடினம். தன்கர் பத்து ஆண்டுகளாக, அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்விப்பதில் முனைப்புடன் இருந்தவர். அவரது சமீபத்திய நடத்தையைப் பார்க்கும்போது, அவரை இகழ்ந்ததற்காக அவர்களுடன் கோபப்படுவது சாத்தியமில்லை. அவர் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியிருப்பதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம். நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைப் போல சக்தி வாய்ந்த எவரும் ஒரு சிறிய பிரச்சினைக்காக இந்தியத் துணைத் தலைவரைப் பதவியில் இருந்து வெளியேற்றும் அளவுக்குக் கோபப்படுவார்களா? இது நம்பக்கூடியதாக இல்லை. அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடப்பதுண்டு என்றாலும் தன்கரின் வெளியேற்றத்திற்கு மேலும் பல காரணங்கள் இருக்கும் என்பதே யதார்த்தம்.

விசுவாசிகளுக்கும் பாதுகாப்பு இல்லை

அதிகாரத்தில் உள்ளவர்களை எவ்வளவு சிரமப்பட்டு மகிழ்விக்க முயன்றாலும், உங்கள் நிலை ஒருபோதும் பாதுகாப்பானது அல்ல. தன்கர் கூர்மையான, இனிமையான மனிதர். சந்திரசேகர் அரசாங்கத்தில் இருந்தவர், பின்னர் காங்கிரஸில் சேர்ந்தவர், 2003இல் 50 வயதில்தான் பாஜகவில் சேர்ந்தார். Jagdeep Dhankars resignation

மோடி சகாப்தத்தில் அவர் இவ்வளவு தூரம் வந்ததற்குக் காரணம், அவர் அரசாங்கத்திற்குத் திறமையான கையாளாகச் செயல்படத் தயாராக இருந்தார் என்பதே. மம்தா பானர்ஜிக்குச் சிக்கல்களை உருவாக்க மேற்கு வங்க ஆளுநராக அனுப்பப்பட்ட அவர், மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். மாநில அரசுடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டார். தடைகளை உருவாக்கிவந்தார். பெரும்பாலான ஆளுநர்கள் மாநில அரசாங்கத்தை விமர்சிப்பதையோ அல்லது முதலமைச்சரைத் தாக்குவதையோ முறையற்றது என்று கருதி பொதுவில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தன்கர் அப்படியெல்லாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவில்லை. Jagdeep Dhankars resignation

தன்கர் வரும்வரை, பெரும்பாலானோர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியைப் பெரும்பாலும் சடங்குபூர்வமானதாகவே பார்த்தோம். ஆனால் அவரது பதவிக்காலம், மாநிலங்களவைத் தலைவரான அவருடைய பங்குதான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவூட்டியது. தன்கர் மோடிக்காகக் கொல்கத்தா ராஜ்பவனில் செய்ததை இங்கும் செய்தார் – எம்.பி.க்களுடன் சண்டையிடுவது, மத்திய அரசுக்குச் சாதகமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, நீதித்துறை போன்ற நிறுவனங்கள்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்துவதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது என அவர் மோடி எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாகச் செயல்பட்டார்.

அரசாங்கத்திற்காக அனைத்து மரபுகளையும், கண்ணியமான செயல்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் மிதித்தார். தனது நற்பெயரையும் பதவியையும் பணயம் வைத்தார். பத்து ஆண்டுகளாக அரசாங்கத்தின் “ஹிட்மேனாக” இருந்த ஒரு நபர் திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் வெளியேற்றத்திற்காகப் பிரதமர்  எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. Jagdeep Dhankars resignation

இந்தியாவின் மிகவும் வெளிப்படைத்தன்மையற்ற அரசாங்கம்

தன்கரின் வெளியேற்றத்திலிருந்து நாம் பெறும் பாடம், நாம் அனைவரும் இந்நேரத்திற்குள் கற்றிருக்க வேண்டிய ஒரு பாடம். இந்த அரசாங்கத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அரசியல் பார்வையாளர்கள் சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர். பெரும்பாலான பட்டியல்களில் தன்கரின் பெயர் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு இடம்பெற்றிருந்தாலும், அவர் ஒருபோதும் முன்னணி வேட்பாளராக இருந்ததில்லை. ஆனால், இறுதியில் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்குப் பின்னால் இருந்தது நரேந்திர மோடியின் புத்திசாலித்தனமான கணக்கு என்பதை யாரும் உணரவில்லை. மாநிலங்களவையை நிர்வகிப்பதுதான் குடியரசுத் துணைத்தலைவரின் வேலை, எனவே அதைச் செய்யக்கூடிய ஒரு கையாளைக் கண்டுபிடிப்போம் என்று அவர் நினைத்தார்.

தன்கரின் வெளியேற்றமும் அதேபோலவே உள்ளது. அவர் ஏன், எப்படி வந்தார் என்பது தெரியாததுபோலவே ஏன் எப்படிச் சென்றார் என்பதும் தெரியவில்லை. மோடி அவரிடத்தில் சலிப்படைந்துவிட்டார் என்றோ அல்லது குடியரசுத் துணைத்தலைவர் தனது எஜமானர்களைக் கோபப்படுத்தும் வகையில் என்ன செய்தார் என்றோ எந்த அரசியல் விமர்சகரும் கவனிக்கவில்லை. இப்போது பரவும் அனைத்துக் கோட்பாடுகளும், உண்மைகளுக்குப் பொருந்தக்கூடிய விளக்கங்களைக் கண்டுபிடிப்பதற்கான பிந்தைய முயற்சிகளே. அவற்றில் எதுவும் முழுமையாக நம்பும்படியாக இல்லை.

நரேந்திர மோடி, இந்திய வரலாற்றிலேயே வெளிப்படைத்தன்மை இல்லாத அரசாங்கத்தை நடத்தும் ஒரே பிரதமர். என்ன நடக்கிறது அல்லது அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்த பிறகும், எந்த அரசியல் பார்வையாளருக்கும் பிரதமரின் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிப் போதுமான நுண்ணறிவு இல்லை. அமைச்சரவை மாற்றங்கள் குறித்த கணிப்புகள் எப்போதும் தவறாகவே உள்ளன. அரசியலமைப்புப் பதவிக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு ஆச்சரியமே. நிகழ்வுகள் முடிந்த பிறகு விளக்கங்களைக் கண்டுபிடிக்க அனைவரும் போராடுகிறார்கள்.

தன்கர் என்ன தவறு செய்தார், ஏன் அவர் வெளியேற்றப்பட்டார் என்று நாம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கலாம். அதுவரை, நான் அவருக்காகக் கொஞ்சம் வருத்தப்படுவேன். அவர் தனது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க அனைத்து மரபுகளையும் தூக்கி எறிந்தார். ஆனால் அதுவும்கூட அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் போதுமானதாக இல்லை.

கட்டுரையாளர் குறிப்பு:

வீர் சங்வி – அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்கிவருபவர். விவாத நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர். 

நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share