மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கி உள்ளது என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித் பவார் பயணித்த விமானம் பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. விமானம் தரையிரங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் அஜித் பவார் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய விமானத்தில் அஜித் பவார் மற்றும் அவரது உதவியாளர்கள் 5 பேர் வரை பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
