தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 29-ந் தேதி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு புதிய பதவி காத்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய டிஜிபியாக யாரை நியமிக்கலாம் என்கிற ஒரு பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னரே மாநில அரசுகள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இந்த பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிசீலனை செய்யும். இதன் அடிப்படையில் புதிய டிஜிபிக்களாக 3 பேரை மத்திய அரசு பரிந்துரைக்கும். அதில் ஒருவர் புதிய டிஜிபி அறிவிக்கப்படுவார். தமிழக அரசு அண்மையில் இந்த பட்டியலை அனுப்பி வைத்தது. மத்திய அரசிடம் இருந்து பரிந்துரை பட்டியல் இன்னமும் தமிழக அரசுக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு டிஸ்மிஸ் ஆனது.
இந்த நிலையில் பதவி ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பதவி காத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு புதியதாக ஏற்படுத்தும் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால். இந்த தகவலை கோட்டை வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
மேலும் ஆகஸ்ட் 30-ந் தேதி வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அதற்கு முன்னதாக சங்கர் ஜிவாலை புதிய பதவியில் அமர்த்துகிறார் என்றும் தெரிவிக்கின்றன கோட்டை தகவல்கள்.