கீழைத் தேயக் கொடுங்கோன்மை : கார்ல் மார்க்ஸும் அம்பேத்கரும் சந்திக்கும் புள்ளி!

Published On:

| By Minnambalam Desk

The meet point of Karl Marx and Ambedkar - ravikumar article

– ரவிக்குமார்

1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ் ஐரோப்பிய நாடுகளைப் பற்றி மட்டும் எழுதவில்லை, இந்தியாவைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவற்றைப் படித்தால் இந்தியாவில் பிறந்தவர்களைவிட இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் புரிதல் சிறப்பாக இருப்பதை உணரலாம். The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

1853க்கும் 1858க்கும் இடையில் கார்ல் மார்க்ஸ் ’நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ பத்திரிகைக்கு இந்தியா குறித்து முப்பத்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். 1857இல் நடந்த சிப்பாய் கலகம் பற்றி உடனடியாகவே இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் பின்னர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. 664 முதல் 1858 வரையிலான இந்திய வரலாறு குறித்து அவர் அந்தக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்ச்காரர்களுக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளில் இடையிடையே வரலாற்றுப் புதினத்தைப்போல சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன.

தென்னிந்தியாவில் தமிழ் உட்பட ஐந்து மொழிகள் பேசப்பட்டதையும், தமிழ் அரசே தொன்மையானது எனவும் எழுதியுள்ளார். பாண்டிய, சோழ, சேர அரசுகள் குறித்தும், மாலிக்காபூரின் படையெடுப்பு, அவர் அடித்த கொள்ளைகள், கன்னியாகுமரியில் அவரால் கட்டப்பட்ட மசூதி குறித்த செய்திகளும் மார்க்ஸின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

The meet point of Karl Marx and Ambedkar - ravikumar article

மறைக்கப்பட்ட மார்க்ஸ் கருத்துகள்! The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதியவற்றில் அவர் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை, கீழைத்தேயக் கொடுங்கோன்மை என்ற கருத்தாக்கங்கள் முக்கியமானவை. அவருக்கு முன்பே கீழைத்தேயவியல் ஆய்வறிஞர்களால் ( orientalists) முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள்தாம் அவை என்றபோதிலும், கார்ல் மார்க்ஸ் அவற்றை மேலும் விரிவாக்கினார். அவற்றில் ஆசிய உற்பத்தி முறை பற்றி சில விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால் கீழைத்தேய கொடுங்கோன்மை குறித்து அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை.

கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நேரத்தில் Economic and Political Weekly , oct 6, 2018 இதழில், கெவின் ஆண்டர்ஸன் ‘ மார்க்ஸ் 200’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ’Marx at the Margins’ என்ற அவரது நூலில் அவர் எழுப்பியிருந்த விவாதத்தின் நீட்சியாக அக்கட்டுரை இருந்தது . அதில் ஆசிய உற்பத்தி முறை குறித்து சில கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார்.

‘மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மானிய தத்துவயியல் (1846) நூலில் உற்பத்தியின் அடிப்படையில் சமூகம் எப்படி இனக்குழு சமூகம், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம், சோஷலிச சமூகம் எனப் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சியடைகிறது என்று விவரித்திருந்தார்கள். ஆனால் 1857 ஆம் ஆண்டுவாக்கில் மார்க்ஸ், ‘ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் காணப்படும் உற்பத்தி முறை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய ‘முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையை ( Pre Capitalist ) ஒத்ததாக இல்லை’ என்பதைக் கண்டறிந்து சொன்னார். இந்த வேறுபாட்டை ஸ்டாலின் கால ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலை 1970களிலும் அங்கு தொடர்ந்தது.

‘ஆசிய உற்பத்திமுறை’ குறித்த நூலொன்றை வெளியிட்டதற்காக Norair Ter- Akopian என்ற புகழ்பெற்ற மானுடவியலறிஞர் மாஸ்கோவிலிருந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் இன்ஸ்டிட்டியூட்டிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். காலனிய ஆட்சிக்கு முந்தைய இந்தியாவில் நிலவிய சமூக உடமை குறித்து மாக்ஸிம் கொவலேவ்ஸ்கி என்பவர் எழுதிய நூலைப்பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்த குறிப்புகளும்கூட மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்களில் இடம்பெறவில்லை’ என ஆண்டர்ஸன் சுட்டிக்காட்டுகிறார். The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

ஆசிய உற்பத்தி முறை! The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை மதிப்பிடுவதற்கு தனி அணுகுமுறை தேவை என்பதை மார்க்ஸ் உணர்ந்திருந்தார் என்பதை அவரது கடைசிக்கால எழுத்துகளை ஆதாரமாகக்கொண்டு ஆண்டர்ஸன் சுட்டிக்காட்டுகிறார். Asiatic Mode of Production குறித்த மார்க்ஸின் கருத்துகளை ஸ்டாலின் மறைத்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிய உற்பத்தி முறை குறித்து ரஷ்யாவில் நடைபெற்ற விவாதங்களைப் பற்றி ஸ்டீபன் பி. டுன் என்பவர் The fall and rise of the Asiatic Mode of Production எனும் நூலை எழுதியுள்ளார் ( 1982) கெவின் ஆண்டர்ஸனைப் போல அவரும் ஒரு மார்க்ஸியர்தான்.

“ஆசிய உற்பத்தி முறை குறித்த புதிய விவாதம் எதுவாக இருந்தாலும் அது கார்ல் மார்க்ஸ் அறிந்திராத தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் – அத்துடன் அது அவரது சிந்தனையை வடிவமைத்த கொள்கைகளின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்” என அவர் கூறியிருப்பது கவனத்துக்குரியதாகும்.

கார்ல் மார்க்ஸின் ‘ஆசிய உற்பத்தி முறை’ என்ற கருத்தாக்கமும் ‘கீழைத்தேய கொடுங்கோன்மை’ என்ற கருத்தாக்கமும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை. The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

“கீழைத்தேயக் கொடுங்கோன்மை” ( oriental despotism) ” என்பதன் ஒரு முக்கியமான அடிப்படையும் விளக்கமும் ‘தன்னிறைவு பெற்ற கிராமங்கள்’ என்னும் கருத்தாக்கமாகும். தன்னிறைவு பெற்ற கிராம அமைப்பே ஒரு கொடுங்கோலனின் தலைமையிலான இந்திய சமூகத்தின் “மாறாத” தன்மைக்கு வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கத்தை முதலில் ஹெகல் தான் முன்வைத்தார். கிராமங்களில் இருக்கும் ஒரு நிலையான, காலங்காலமாக மாறாமல் இருக்கும் ஏற்பாட்டைப் பற்றி ஹெகல் குறிப்பிட்டார். அந்த ஏற்பாடு யாருடைய விருப்பத்திற்கும் உட்பட்டது அல்ல, எந்தவொரு அரசியல் மாற்றமும் பொதுவான இந்து ஒருவருக்குப் பொருட்படுத்தத்தக்க விஷயம் அல்ல, ஏனென்றால் அவரது சமூக நிலை எந்த மாற்றமும் அடைவதில்லை ‘ என அவர் கூறினார்.

“ஒவ்வொரு கிராமத்திற்குச் சொந்தமான முழு வருமானமும், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: ஒன்று, ராஜாவுக்கு சொந்தமானது, மற்றொன்று விவசாயிகளுக்குச் சொந்தமானது; ஆனால், விவசாயிக்குச் சேரும் பங்கிலிருந்து விகிதாசார அடிப்படையில் அந்தப் பகுதியின் நிர்வாகஸ்தர், நீதிபதி; நீர் அளவையாளர்; மத வழிபாட்டை மேற்பார்வையிடுபவரும், நல்ல நாள் கெட்ட நாள் குறித்துத் தருபவருமான பிராமணர்; கொல்லர், தச்சர், குயவர், சலவை செய்பவர், முடிதிருத்தும் நபர், மருத்துவர், நடனப் பெண்கள், இசைக்கலைஞர், புலவர் ஆகியோருக்கு பங்கு பிரித்துத் தரப்பட்டது “ என்று ஹெகல் எழுதியுள்ளார்.

கீழைத்தேய கொடுங்கோலன்! The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

ஹெகல் எழுதியதன் அடிப்படையிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில பிரிட்டிஷ் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையிலும், கார்ல் மார்க்ஸ், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் மகிழ்ச்சியான கூட்டை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களின் தன்னிறைவு, தன்னாட்சி பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார். கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டு, வெளி உலகத்தைப் பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பதிலிருந்து அவர்களை விடுவித்தது. கைவினைஞர்களுக்கு அவர்களின் கிராமத்திற்கு வெளியே எந்த “சந்தை”யும் இல்லை. கிராமங்களே அவர்களைப் பொருத்தவரை பிரபஞ்சங்களாக இருந்தன. அந்த நம்பிக்கையோடு அவர்கள் ஒரு செயலற்ற, உயிரோட்டமில்லாத வாழ்க்கையை நடத்தினர். அந்தக் கிராமங்கள் கிடைமட்டமாக மற்ற கிராமங்களோடு இணைக்கப்படவில்லை. இதன் விளைவாக ‘கீழைத்தேய கொடுங்கோலன்’ அவர்கள் மீது எளிதாக ஆதிக்கம் செலுத்தினான்” என கார்ல் மார்க்ஸ் கருதினார்.

ஆனால், 20 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலான இந்திய வரலாறு, ஹெகல், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக இருந்த பொருளாதார நிலவரம் குறித்த தரவுகளைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

கீழைத்தேய கொடுங்கோன்மை என்பதன் அடிப்படையாக அமைந்த ஆசிய நாடுகளின் உற்பத்தி முறை ( Asiatic mode of production) என்பதை மறுத்து வட இந்திய வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.சர்மா எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளின் அடிப்படையில் கராஷிமா எழுதியிருக்கிறார்.

கிராமக் குடியரசுகள் என்ற கருத்து மறுக்கப்பட்டாலும் , “விவசாயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமானதாக உள்ளது” என்ற மார்க்ஸின் கருத்து இப்போதும் உண்மையாகவே உள்ளது. “தட்பவெட்பநிலை மற்றும் நிலப்பரப்பின் தன்மை காரணமாகக் கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்கையான பாசனவசதி இங்கு தவிர்க்க முடியாததாகிறது. அதற்கு சுயவிருப்பமான கூட்டுமுயற்சி இந்தியாவில் பயன்படாது. நிலப்பரப்பு மிகவும் பேரளவில் இருப்பதால் அரசாங்கத்தின் தலையீடு அவசியமானது. அதனால்தான் பாசன வசதிகளைச் செய்துகொடுக்கும் பொருளாதாரப் பணி இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய அரசாங்கங்கள் அனைத்துக்கும் ஏற்பட்டது” என கார்ல் மார்க்ஸ் விளக்கினார். அது நிராகரிக்கத்தக்கதல்ல.

அத்துடன், “ஐரோப்பாவில் விவசாய உற்பத்தி நல்ல அல்லது கெட்ட பருவநிலையைப் பொருத்திருப்பதுபோல் ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கத்தைப் பொருத்ததாக இருக்கிறது’’ என கார்ல் மார்க்ஸ் சொன்னதும் தவறானதல்ல.

மார்க்ஸ் அம்பேத்கர் சந்திக்கும் புள்ளி! The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

மார்க்ஸின் பொருத்தப்பாட்டை ஆர்.எஸ்.சர்மா சிறப்பாக சுட்டிக் காட்டியிருக்கிறார் : “ பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட்ட ‘ கீழைத்தேயக் கொடுங்கோன்மை’ என்னும் கோட்பாட்டை அதன்பின்னர் வரலாற்று ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக விமர்சிப்பது எளிது என்பது உண்மைதான். ஆனால், கீழைத்தேய கொடுங்கோன்மை என்னும் கோட்பாடு ‘செத்துப்போன குதிரையாகிவிடவில்லை’, இப்போது அதில் மதம் என்னும் பரிமாணத்தைச் சேர்ப்பதன் மூலம் மீண்டும் அதை உயிர்ப்பிக்க முடியும். பண்டைய இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளை ஆராய்ந்தால் நமது புரிதல் அந்தத் திசையில் முன்னேற முடியும். அந்தவிதத்தில் , கீழைத்தேயக் கொடுங்கோன்மை என்னும் பிரச்சினையை முற்றிலும் மாறுபட்ட முறையில் முன்வைத்ததற்கும், பண்டைய காலங்களில் இந்தியாவிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் அரசின் சமூக-பொருளாதார அடிப்படைகளைப் பற்றி சிந்திக்க வைத்ததற்கும் நாம் கார்ல் மார்க்ஸுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.” என அவர் கூறியிருப்பது ( The Socio-Economic Bases of “Oriental Despotism” in Early India) வகுப்புவாதப் பாசிசத்தை நாம் எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சிந்திக்கத் தக்கதாகும்.

கீழைத்தேயக் கொடுங்கோன்மை என்ற கருத்தாக்கத்தை ‘சனாதனம்’ என்ற ‘வருணாசிரமக் கோட்பாட்டுடன்’ பொருத்தி நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்து மதம் குறித்த அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்குக் கைகொடுக்கும். கார்ல் மார்க்ஸையும் அம்பேத்கரையும் தத்துவத் தளத்தில் இணைக்கும் புள்ளி அதுவாகவே இருக்கும். The meet point of Karl Marx and Ambedkar – ravikumar article

கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share