சத்துணவு திட்டத்தில் வேலை, ஆசிரியர் பணி, விஏஓ பணி உள்ளிட்ட அரசு பணிகளை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக நிகிதா மீது புகார்கள் பதிவாகி உள்ளன. The List of Nikitha’s Alleged Frauds
சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் மரன விவகாரத்தில் புகார்தாரர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா. இவர் மீது 2011-ம் ஆண்டு முதலே பல்வேறு மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிகிதா மீதான மோசடி புகார்கள் விவரம்:
- திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திடம் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ11 லட்சம் மோசடி
- ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடியிடம் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி
- மதுரை செக்கானூரனி செல்வத்திடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி
- திருமங்கலம் தெய்வத்திடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி
- பச்சன்கோப்பன்பட்டி வினோத் குமாரிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி
விவகாரத்து மூலம் மோசடி
மதுரை தென் இந்திய பார்வார்டு பிளாக் நிறுவனர் திருமாறனை திருமணம் செய்வதாக நடித்து திருமணமான இரவே ஓடிப் போனவர் நிகிதா. பின்னர் திருமாறனுக்கு விவகாரத்து தருவதற்காக அவரிடம் ரூ10 லட்சம் மோசடி. இதேபோல பலரையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு பின்னர் விவாகரத்தில் கையெழுத்து போட பணம் பெற்று மோசடி செய்துள்ளார் நிகிதா. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் நிகிதாவின் இந்த மோசடிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.