தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற நிலையில் இன்று (பிப்ரவரி 23, 2026) தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் நான்காம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு பணிகள் நடைபெற்றது. இதில் இறந்த வாக்காளர்கள் நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. 40 நாட்கள் இந்த பணிகள் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி நிறைவடைந்தது அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.4 3 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
மேலும் இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண் ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட் டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் விபரங்கள்
காஞ்சிபுரம்:
ஆண்கள் 5,78,080
பெண்கள் 6,13,917
மூன்றாம் பாலினத்தவர் 197
மொத்தம் 11,92,194
தூத்துக்குடி
ஆண்கள் 6,71,742
பெண்கள் 7,04,689
மூன்றாம் பாலினத்தவர் 193
மொத்தம் 13,76,624
தருமபுரி
ஆண்கள் 6,24,647
பெண்கள் 6,15,311
மூன்றாம் பாலினத்தவர் 150
மொத்தம் 12,40,108
விருதுநகர்
வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417.
ஆண்கள்- 7,28,539
பெண்கள்- 7,68,62
