பாமகவில் விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு – ராமதாஸ் அறிவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Dr Ramadoos

ராமதாஸ் தரப்பு பாமகவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பாமகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவதற்கு மேலும் 2 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான தேதி 13.1.2026 செவ்வாய்க்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share