ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை அசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், எழுத்துத் தேர்வின் மூலமாக (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடைபெறுகிறது. இதனை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிவிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் – II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளவோம்.
ஆல் தி பெஸ்ட்