ADVERTISEMENT

மே.வங்கத்தில் பதற்றம்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கறுப்பு கொடி- ‘Go Back’ போராட்டம்!

Published On:

| By Mathi

WB ECI

மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்ற் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டது. மேலும் ஞானேஷவர் தங்கும் ஹோட்டலுக்கு முன்பாக ‘Go Back’ போராட்டமும் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஞானேஷ்குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு மேற்கு வங்கம் சென்றுள்ளது. அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை இக்குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இதற்காக அம்மாநிலத்தில் 3 நாட்கள் இந்திய தேர்தல் ஆணைய குழு முகாமிடுகிறது.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தின் SIR-க்கு எதிராக மேற்கு வங்கம் மிகக் கடுமையாக போராடி வருகிறது. இது தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதாடியது பெரும் கவனம் பெற்றது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவின் வருகைக்கு எதிராக மேற்கு வங்க்த்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெளியே ஞானேஷ்குமாருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. மேலும் ஞானேஷ்குமார் உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணைய குழு தங்கும் ஹோட்டல் முன்பாகவும் “Go Back” பதாகைகளுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share