ADVERTISEMENT

இனி வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் இனி வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பரவலாக பனிமூட்டம் நிலவி வருகிறது.  குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலூரில் இன்று ஊட்டி, கொடைக்கானல் போல பனி மூட்டம் காணப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தசூழலில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 7) வெளியிட்ட அறிவிப்பில்,  ‘07-02-2026 முதல் 11-02-2026 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

12-02-2026 மற்றும் 13-02-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

07-02-2026 முதல் 11-02-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share