தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிளாஸ் டீ விலை ரூ.12-ல் இருந்து ரூ.15-க்கும் ஒரு கிளாஸ் காபி விலை ரூ.15-ல் இருந்து ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையிலும் சில இடங்களில் டீ விலை நேற்று (செப்டம்பர்-3) முதல் உயர்ந்துள்ளது.
கோவையில் ஒரு கிளாஸ் டீ ரூ. 20க்கும், ஒரு கிளாஸ் காபி ரூ. 26க்கும், பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17க்கும் விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிலிண்டர், டீ, காபி தூள்கள், பால் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய அரசு பால் உள்ளிட்ட பால் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்து நேற்று அறிவித்துள்ள நிலையில் தற்போது கோவையில் விலை உயர்ந்துள்ள சம்பவம் டீ, காபி, பிரியர்களிடையே இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.