சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் ரியாக்ட் ஜே.எஸ் டெவலப்பர் (React JS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இன்டர்வியூ (Walk in Interview) மார்ச் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பில் தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பித்து இண்டர்வியூவில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பணிக்கு ஆட்கள் தேர்வு?
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது ரியாக்ட் ஜே.எஸ் தொடர்பான அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பணிகளுக்காக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான முக்கிய திறன்கள்:
- ரியாக்ட் / ஆங்குலர் / வியூ போன்ற ஃபிரேம்வொர்க் பயன்படுத்தி அப்ளிகேஷன் உருவாக்கும் திறன்
- ஃபிரேம்வொர்க் காம்போனென்ட் லைஃப் சைக்கிள் மற்றும் ரெடக்ஸ் பற்றிய அறிவு
- யூஐ ஃபிரேம்வொர்க் காம்போனென்ட்கள் உருவாக்கும் அனுபவம்
- மெட்டீரியல் யூஐ அல்லது பேப்பர் யூஐ போன்ற த்ர்ட்பார்ட்டி லைப்ரரி பயன்பாடு
இவை போன்ற திறன்கள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான தொழில்நுட்ப அறிவு
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் இ.சி.எம்.ஏ 6 ஸ்டாண்டர்டு
- என்.பி.எம், வெப்பேக் போன்ற டூல்ஸ்
- ஜாவா மற்றும் ரெஸ்ட்ஃபுல் ஏபிஐ
- யூஐ டெவலப்மென்ட் தொடர்பான அடிப்படை அறிவு
மேலும், எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் போன்ற தொழில்நுட்பங்களில் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனுபவம் மற்றும் திறன்கள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு:
- குறைந்தபட்சம் 4 ஆண்டு அனுபவம்
- அதிகபட்சம் 10 ஆண்டு அனுபவம்
இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்:
- கிரிட்டிக்கல் திங்கிங் திறன்
- டீமாகவும் தனியாகவும் பணியாற்றும் திறன்
- அகைல் முறையில் பணியாற்றிய அனுபவம்
போன்ற திறன்களும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்டர்வியூ விவரம் (Interview Details)
டிசிஎஸ் நிறுவனத்தில் இந்த பணிக்கான இன்டர்வியூ மார்ச் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு இன்டர்வியூ நேரம் மற்றும் பிற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. தேர்வாகும் நபர்களின் அனுபவம் மற்றும் திறனைப் பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியும் அனுபவமும் உள்ள ஐடி துறையினர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
