தமிழக அரசின் புதிய தலைமை கொறடா ராமச்சந்திரன்

Published On:

| By Selvam

தமிழக அரசின் புதிய தலைமை கொறடாவாக கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவை இன்று (செப்டம்பர் 28) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் ஆவடி நாசர், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராமச்சந்திரன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அரசு தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் அரசு தலைமை கொறடா பதவிக்கு காய் நகர்த்தி வந்தார். ஆனால், தற்போது ராமச்சந்திரன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதால், அவருக்கு தலைமை கொறடா பதவியை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது.

செல்வம்

நோ கமெண்ட்ஸ்… கிரேட் எஸ்கேப்: அப்டேட் குமாரு

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share