‘ஆடி அம்மன் கோவில் சுற்றுலா’- இந்து சமய அறநிலையத் துறையை தொடர்ந்து சுற்றுலா துறை அறிவிப்பு!’

Published On:

| By Minnambalam Desk

‘Aadi Amman Temple Tour

தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ‘ஒருநாள் அம்மன் கோவில் சுற்றுலா’வுக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. Aadi Amman Temple Tour

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பாக சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் நகரங்களில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்வதற்காக ஒருநாள் பக்தி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 18-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் ‘ ஒருநாள் பக்தி சுற்றுலா’ செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படும். இந்த நாட்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா பயணம் செயல்படுத்தப்படும். இதற்கான கட்டணம் ரூ1,000.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே, அம்மன் திருக்கோவில்களுக்கு 2,000 பக்தர்களை கட்டணமின்றி ஆன்மீக பயணம் செல்வதாக அறிவித்திருந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை ரூ1,000 கட்டணத்தில் ஆடி அம்மன் கோவில் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share